Nuclear Operaion.. அணு உலைகள் மீது ரஷ்யா ஏவுகணை வீச திட்டம்? புடினின் பரபர பிளான்? உக்ரைன் குமுறல்
மாஸ்கோ: உக்ரைனில் இருக்கும் அணு உலைகளை தேடி தேடி கைப்பற்றும் முடிவில் ரஷ்யா இருக்கிறது. இதுவரை உக்ரைனில் இருக்கும் அணு உலைகள் மீதுதான் ரஷ்யா அதிக அளவு கவனம் செலுத்தி உள்ளது.
உக்ரைனில் தற்போது உச்சபட்ச போர் நடந்து கொண்டு இருக்கிறது. உக்ரைனுக்குள் 60 சதவிகித ரஷ்ய படைகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்னும் 40 சதவிகித படைகள் எல்லை ஓரத்தில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு உள்ளன.
உக்ரைன் நாட்டு ராணுவமும் முழுமையாக களத்தில் இறங்கி போராடி வருகிறது. அதேபோல் அந்நாட்டு குடி மக்களுக்கும் ஆயுதங்கள் கொடுத்து களத்தில் இறக்கி உள்ளனர்.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் உக்ரைனில் இருக்கும் அணு உலைகளை ரஷ்யா தேடி தேடி பிடித்துக்கொண்டு இருக்கிறது. உக்ரைன் நாடு தங்களின் மின்சார தேவைக்கு அதிக அளவில் அணு உலைகளை நம்பித்தான் இருக்கிறது.உக்ரைன் நாட்டின் 52 சதவிகிதம் மின் தேவையை அணு உலைதான் பூர்த்தி செய்கிறது. இதனால் அந்த நாட்டில் நிறைய அணு உலைகள் உள்ளன. சில அணு உலகைளில் 4-5 ரியாக்டர்கள் உள்ளன.

ரஷ்யா பிளான்
அதிகமாக கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில்தான் அணு உலகைகள் உள்ளன. இதைத்தான் ரஷ்யா கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறது. அங்கு மொத்தம் 15 அணு மின் நிலைய உலைகள் உள்ளது. கேல்நிட்ஸ்கி, ரிவின், தென்மேற்கு, சசபோரியா, தெற்கு உக்ரைன் ஆகிய பகுதிகளில் இந்த அணு உலைகள் உள்ளது. இந்த பகுதிகளை நோக்கி ரஷ்யாவின் படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன.

ரஷ்ய படைகள் முன்னேற்றம்
முக்கியமாக இன்று அதிகாலை உக்ரைனில் கிழக்கு பகுதியில் உள்ள Zaporizhzhia அணு மின் நிலையத்தை ரஷ்யா நெருங்கியது. அந்த பகுதிக்கு உள்ளே ரஷ்ய படைகள் நுழைந்து உள்ளன. அந்த இடத்தை ரஷ்யா சுற்றி வளைத்து உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ரஷ்யா அந்த அணு மின் நிலையத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டு மின்சாரத்தின் பெரும்பகுதி அணு உலைகளை நம்பித்தான் உள்ளது.

அணு ஆயுதம்
அதோடு இங்கே உக்ரைன் அணு ஆயுதங்களை மறைமுகமாக தயாரிக்கலாம் என்றும் ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது. இதனால் அந்த அணு உலைகளை கைப்பற்றினால் மின்சாரத்தை தடை செய்து உக்ரைனை ஸ்தம்பிக்க வைக்கலாம். அணு ஆயுதங்கள் ஒரு வேளை இருந்தால் அதையும் கூட கைப்பற்றலாம். இதனால் ரஷ்யா பிளான் போட்டு அணு உலைகளை கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால் ரஷ்யா அணு உலைகள் மீது ஏவுகணைகளை வீசுவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ஏவுகணை
Zaporizhzhia அணு உலை இருக்கும் பகுதிக்கு ரஷ்யா ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவும் கிராட் என்ற ஆயுதத்தை கொண்டு வந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஆயுதம் Zaporizhzhia அணு உலையை நோக்கி திருப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உக்ரைன் அரசு புகார் வைத்துள்ளது. அணு உலைகளை தாக்கும் திட்டத்தில் ரஷ்யா இருப்பதாக உக்ரைன் புகார் வைத்து இருக்கிறது.

உதவி
இதையடுத்து உக்ரைன் சர்வதேச நாடுகளிடம் உதவிக்கு சென்று இருக்கிறது. எங்கள் அணு உலைகளை ரஷ்யா அழிக்க பார்க்கிறது. பெரிய பேரழிவை ஏற்படுத்த ரஷ்யா நினைக்கிறது. இதை நாங்கள் தடுப்போம். எங்களுக்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும். எங்கள் படைகளை மொத்தமாக அணு உலைகளை காப்பதற்காக அனுப்பி இருக்கிறோம் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications