போருக்கு வாருங்கள்.. 16 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்களை ராணுவத்துக்கு அழைத்தது உக்ரைன் அரசு!
கிவி: உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி இருக்கும் நிலையில், 16 வயது முதல் 60 வயது வரையிலான உக்ரைன் நாட்டு ஆண்கள் அனைவரும், போரிலும், ராணுவ பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
உக்ரைன் நேட்டோ நாடுகளின் பட்டியலில் இணைய விரும்பியது. இதனால் தங்களுக்கு ஆபத்து வரும் என ரஷ்யா நினைத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு நாடுகளிலும் போர் சூழல் அதிகரித்தது.
நேட்டோவின் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளுக்கும், நேட்டோ நாடுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் ஒப்பந்தம். ஆனால் உக்ரைன் நேட்டோவின் நிரந்தர உறுப்பினராக இல்லாத நிலையில் நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் உள்ளது, ரஷ்யாவிற்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர்
உக்ரைன் மீது இன்று போர் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது ரஷ்யா. இரு நாடுகளும் தீவிரமாக போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். போர் சூழலைத் தவிர்க்க ஐக்கிய நாடுகள் சபை ரஷ்யாவை படைகளைத் திரும்பப் பெறுமாரு கேட்டுக்கொண்டது. ஆனாலும் போர் தீவிரமாக நடந்து வருகிறது. இரு நாடுகளும் விமானங்களை மாறி மாறி சுட்டன. தற்போது சில ராணுவ வீரர்களும் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

அவசர நிலை
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதல் தொடங்கி இருப்பதால், உக்ரைனில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்கள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேறி விடுமாறு உக்ரைன் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல ரஷ்ய தூதரகத்தை மூடி, ரஷ்ய அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது உக்ரைன். இதையடுத்து நாடு முழுவதும் 30 நாட்கள் அவசர நிலை கடைபிடிக்கப்படவுள்ளது.

ஆண்கள்
ரஷ்யா தங்கள் மீது தொடுத்திருக்கும் போரை எதிர்கொள்ள முக்கிய நடவடிக்கையாக, 16 வயது முதல் 60 வயது வரையிலான உக்ரைன் நாட்டு ஆண்களை ராணுவ பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பலர் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். கிழக்கு பகுதியில் உக்ரைனுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இருக்கும்போது, நாட்டு மக்களை போருக்கு அழைத்துள்ளது உக்ரைன்.

கண்டனம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் உக்ரைனில் உள்ளன. மேலும், உக்ரைனில் இருக்கும் பல நாட்டு மக்களும் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப, அந்தந்த நாட்டு தூதரகங்களைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். உக்ரைனில் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்வது தற்போது கேள்விக்குறியாகி வருகிறது.












Click it and Unblock the Notifications