சாவுக்கு பிறகு விமானம் அனுப்பி என்ன பயன்? - உக்ரைனில் சிகிச்சை பெறும் இந்திய மாணவர் கேள்வி
கீவ்: உக்ரைனில் குண்டடிப்பட்டு சிகிச்சையில் இருக்கும் இந்திய மாணவர், தன்னை இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அங்குள்ள மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி, அண்டை நாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.
அப்படி உக்ரைனைவிட்டு வெளியேறும் போது, இந்திய மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு குண்டடிபட்டது.

உக்ரைன்
கீவ் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங், இதுகுறித்து தொலைபேசி வழியாக செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ''உக்ரைன் மீதான போர் தொடங்கியது முதல் நாங்கள் இங்கிருந்து வெளியேற முயற்சி செய்து வந்தோம். உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்காக சக மாணவர்களுடன் எல்லையை நோக்கிச் சென்றோம்.

தாக்குதல்
அப்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக எங்களை வந்த வழியாகவே, திரும்பிச் செல்லுமாறு உக்ரைன் வீரர்கள் கூறினார்கள். இதனால் நாங்கள் மீண்டும் கீவ் நகர் நோக்கி சென்றோம். நாங்கள் திரும்பும் வழியில் எங்கள் கார் மீது துப்பாக்கியால் சிலர் சுட்டனர். அதில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து எனக்குக் காயம் ஏற்பட்டது. அதையடுத்து கீவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன்.

மறுபிறவி
நெஞ்சில் குண்டு பாய்ந்திருந்தது. அதை மருத்துவர்கள் எடுத்து, எனக்கு தொடர் சிகிச்சை கொடுத்தனர். சிகிச்சைக்குப் பின்னர் மறு பிறவி கிடைத்தது போல் உள்ளது. என் சாவுக்குப் பிறகு மீட்பு விமானம் அனுப்புவதில் எந்தப் பலனும் இல்லை. கடவுள் எனக்கு இரண்டாவது பிறவி தந்துள்ளார். மறுபிறவி எடுத்து வந்துள்ளேன். என்னை இங்கிருந்து வெளியேற்ற உதவும்படி இந்தியத் தூதரகத்தை கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர்
உக்ரைனில் ஏற்கெனவே இந்திய மாணவர் ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்நிலையில், மற்றொரு மாணவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரைப் போல பலரும் உக்ரைனில் சிக்கி இருக்கிறார்கள். உக்ரைனின் கீவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று மத்திய
சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் உறுதி செய்திருந்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications