இனி எங்களால் முடியாது.. தாமதமின்றி அமைதியை எதிர்பார்க்கிறோம்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்
கீவ் : ரஷ்ய ராணுவம் முற்றுகையிட்டுள்ள மரியபோல் நகரத்தின் மோசமான நிலையை நினைவூட்ட மற்ற நாடுகளின் பாராளுமன்றங்களில் நான் தொடர்ந்து முறையிடுவேன் எனவும், உண்மையில் தாமதமின்றி நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்த ரஷ்யா திடீரென போரை தொடங்கியது. தரைவழி, வான்வழி, கடல்வழி என மும்முனை தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா 34வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் எல்லையில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து குண்டு மழை பொழிகின்றன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் ஒருமாதம் கடந்து விட்டாலும் கூட இன்னும் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தனது தாக்குதலை தொடுத்து வருகிறது. ஆனால், உக்ரைன் படைகள் கடும் சவால் அளிப்பதால், ரஷ்யாவில் இன்னும் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை.

ஆயுத உதவி
பல்வேறு நாடுகளிலும் தங்களுக்கு மேலும் ஆயுத உதவி தேவை என உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கூடுதலான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் ஏவுகணைகள் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன ஆயுதங்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கியுள்ள நிலையில் போர் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஆனால் போரை விரைவில் முடிக்க திட்டமிட்டு ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது

உக்ரைனின் மரியபோல்
ரஷ்ய ராணுவம் முற்றுகையிட்டுள்ள மரியபோல் நகரத்தின் மோசமான நிலையை நினைவூட்ட மற்ற நாடுகளின் பாராளுமன்றங்களில் நான் தொடர்ந்து முறையிடுவேன் எனவும், உண்மையில் தாமதமின்றி நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைகாட்சி மூலம் உரையாற்றிய அவர், " உண்மையில் தாமதமின்றி நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம். துருக்கியில் நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்பும் தேவையும் உள்ளது. இது மோசமானதல்ல, முடிவைப் பார்ப்போம்.

நன்றி ராணுவத்திற்கு நன்றி
ரஷியா முற்றுகையிட்ட மரியுபோல் நகரங்களின் மோசமான நிலைமையை நினைவூட்ட மற்ற நாடுகளின் பாராளுமன்றங்களில் நான் தொடர்ந்து முறையிடுவேன். உக்ரைனின் ஆயுதப் படையினர் ஆக்கிரமிப்பாளர்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் முன்னேறி வருகின்றனர் என்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications