ஆயுதம் ஏந்திய சிங்கப் பெண்கள்.. தலைநகரை காக்க வீரத்துடன் அணிவகுப்பு.. தீரமுடன் களமாடும் உக்ரைன்..!
கீவ் : உக்ரைன் தலைநகர் கீவ்வை பாதுகாக்க ஆயுதங்களுடன் உக்ரைன் மக்கள் வலம் வரும் நிலையில், உக்ரைனின் ஆண்களோடு, பெண்களும் குழுக்களாக ஆயுதங்களுடன் கண்காணித்து வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மூன்றாவது நாளாக உக்ரைன் மீது ரஷ்யாவின் ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்பு சத்தம், துப்பாக்கிச் சூடு என கலவர பூமியாகி உள்ளது உக்ரைன்.
உலக நாடுகள் கைவிட்ட நிலையில் தனியே போரை சந்தித்துள்ள உக்ரைன் ராணுவத்தினர் தீரத்துடன் போராடி வருகின்றனர். ரஷ்யாவுக்கு தக்க பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

உக்ரைன் தலைநகர் கீவ்
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள நீர் மின் நிலையத்தை கைப்பற்றிய ரஷிய ராணுவம், கீவ்வை கிட்ட தட்ட முழுமையாக சுற்றி வளைத்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அத்தோடு பழமை வாய்ந்த கட்டிடங்களையும் சேதமாக்கி வருகிறது ரஷ்யா. பிரான்ஸ் நாட்டிடமிருந்து உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் வந்து கொண்டிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ள நிலையில், போரிலும் களமிறங்கியுள்ளார்.

உக்ரைன் உறுதி
ஆயுதங்களை கைவிட்டு விட்டு தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு குழு அனுப்ப முடிவு செய்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. இருந்தும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை எனவும் , தாங்கள் தொடர்ந்து போரிடுவோம் என கூறியுள்ளார். உக்ரைன் போரை நிறுத்த வேண்டுமென உலகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தும் மக்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், ரஷ்யாவில் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது ரஷ்யாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிடங்கள் சேதம்
தலைநகர் கீவ்வை கைப்பற்றினால் போர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது போல் என ரஷ்யா கருதுவதால், அதனை முடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். அரசு அலுவலகங்கள், ராணுவ கட்டுப்பாட்டு அமைப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி வருகிறது. அந்நாட்டிலுள்ள வானுயர்ந்த கட்டிடங்களை ரஷ்யா சேதப்படுத்தி தரைமட்டமாக்கிய புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video

களமிறங்கிய பெண்கள்
இந்நிலையில் தலைநகரை ரஷ்யாவிடமிருந்து காக்க வேண்டுமென உயிரைப் பணயம் வைத்து உக்ரைன் ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர். நேற்று திருமணமான தம்பதிகள் தொடங்கி வயதான முதியோர் வரை உக்ரைன் ராணுவத்தினருக்கு கைகொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ராணுவத்தினரும் மக்களும் கைகோர்த்துள்ள நிலையில், ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் களமிறங்கியுள்ளனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் குழுக்களாக ஆயுதங்களை ஏந்தி தீரத்துடன் கண்காணித்து வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications