ரஷியாவுக்கு அடுத்த அடி... ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இடைநீக்கம் - புறக்கணித்த இந்தியா
ஜெனிவா: உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷியா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி படையெடுக்கத் தொடங்கிய ரஷியா, பல கட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது.
விடாமல் தாக்குதல்களை நடத்தினாலும் உக்ரைன் தலைநகர் கீவை ரஷியாவால் கைப்பற்ற முடியவில்லை.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்
அதே நேரம் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்களை போர் குற்றமாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியாவை நீக்கம் செய்யும் தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டு வந்தது. உக்ரைனில் ரஷ்ய படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், போரிலிருந்து பின் வாங்கியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம்சாட்டி அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது.

ரஷியாவின் விளக்கமும் உக்ரைனின் மறுப்பும்
அதே நேரம் உக்ரைனின் ராணுவ படைகள் மீதும் அதன் பாதுகாப்பு கட்டமைப்பை தகர்க்கும் விதமாக மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் பொதுமக்களை குறிவைத்து தங்கள் படையினர் கொல்லவில்லை என்றும் ரஷியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ரஷியாவின் இந்த விளக்கத்தை உக்ரைன் அரசு திட்டவட்டமாக மறுத்தது.

93 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு
இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இன்று நடைபெற்றது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 93 நாடுகளும், எதிராக 24 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 47 உறுப்பினர்கள் 193 உறுப்பு நாடுகளால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ரஷியா சஸ்பெண்ட்
இந்த நிலையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் ரஷியாவை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்பாக ரஷியாவை கண்டித்து ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட 2 தீர்மானங்கள் முறையே 141 மற்றும் 140 வாக்குகளுடன் நிறைவேறின.

புறக்கணித்தவர்கள், நட்பு நாடுகள் இல்லை
இந்நிலையில் மூன்றாவதாக கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் குறைந்ததும், புறக்கணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் கவனிக்கத்தக்க ஒன்று. இந்த சூழலில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ரஷியா கருத்து தெரிவித்துள்ளது. அதில், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணிப்பதும் நட்பற்றது தான் என கூறியுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications