திடீரென நெருங்கி வந்த போர் விமானம்.. சிரியா எல்லையில் ஈரான் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல்.. பகீர்
பாக்தாத்: ஒரு புறம் இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சிரியா எல்லையில் ஈரான் ராணுவ வாகனம் அடையாளம் தெரியாத போர் விமானங்களால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது இஸ்ரேல் நாட்டில் போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த வாரம் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே பல காலமாக மோதல் இருக்கும் போதிலும், இந்தத் தாக்குதல் மிக மோசமாக இருந்தது.

முதலில் ஏவுகணை தாக்குதலை நடத்திய ஹமாஸ் குழு, அடுத்து பாராசூட் மூலமாகவும் ஜீப் மூலமாகவும் உள்ளே இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதலை நடத்தியது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடங்கியது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதலை நடத்தின.
இஸ்ரேல் விவகாரம்: இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் தொடங்கிய போர் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்கிறது. இந்தப் போரில் இரு தரப்பிலும் தலா 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்போது காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே காசா பகுதியில் இருக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இதனால் இஸ்ரேல் மட்டுமின்றி, அந்த பிராந்தியம் முழுக்கவே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஈராக் மற்றும் சிரியா எல்லையில் அமைந்துள்ள அல்-புகாமெல் எல்லை அருகே ஈரான் நாட்டின் ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது திடீரென அவை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
திடீர் தாக்குதல்: ஈரான் ராணுவ வாகனங்களை அடையாளம் தெரியாத போர் விமானங்கள் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது வரை இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர்... ஈரான் படைகளுக்கு எந்தளவுக்குப் பாதிப்பு என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அதேபோல இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்றும் சரியாகத் தெரியவில்லை. ஈராக்- சிரியா எல்லையில் சென்று கொண்டிருந்த போது திடீரென அங்கே வந்த ராணுவ விமானங்கள் அங்கிருந்த ஈரான் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதலை நடத்தியதாக மட்டுமே தகவல் வெளியாகியுள்ளது. இது அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராணுவ அதிகாரிகள் விசாரணையை இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பரபரப்பு: ஏற்கனவே அங்கே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைக்கு எதிராகப் போர் நடந்து வருகிறது. இந்தச் சூழலில் ஈரான் நாட்டின் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications