2-ம் உலகப் போர் பாராசூட், விமான பாகங்கள்- அமெரிக்காவிடம் வழங்கிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்!
டெல்ல்: 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பாரசூட், விமானத்தின் பாகங்களை டெல்லியில் அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினிடம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இரு அமைச்சர்களும் பரந்த அளவிலான பாதுகாப்பு மற்றும் உத்தி பூர்வமான பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். பாதுகாப்புத் தொழில்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இரு தரப்பிலிருந்தும் பாதுகாப்புத் துறைகளை ஒன்றிணைத்து பாதுகாப்பு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்புக் கருவிகளை உருவாக்குவதிலும், இணை உற்பத்தி செய்வதிலும் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது.

முக்கியமான துறைகளில் கூட்டு ஆராய்ச்சியுடன் தங்கள் பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அமைச்சர்கள் விவாதித்தனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்திய-அமெரிக்க பாதுகாப்பு தொழில்துறை சூழல் அமைப்பான இண்டஸ்-எக்ஸ் முன்னேற்றத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகள், வணிகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான உத்திபூர்வமான தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.
பஹ்ரைனை தலைமையிடமாகக் கொண்ட பலதரப்பு கட்டமைப்பான ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் முழு உறுப்பினராக உயர்த்துவதற்கான இந்தியாவின் முடிவை அமைச்சர் ஆஸ்டின் வரவேற்றார்.
போரின்போது காணாமல் போனவர்கள் கணக்கு முகமைப் பணியின் ஒரு பகுதியாக அசாமில் மீட்கப்பட்ட சில பொருட்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அமெரிக்க அமைச்சர் ஆஸ்டினிடம் ஒப்படைத்தார். இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த அமெரிக்கப் படைகளின் பாராசூட், சீருடை மற்றும் விமானத்தின் பாகங்கள் இதில் அடங்கும். அமைச்சர்கள் தங்கள் சந்திப்பை முடிப்பதற்கு முன், தங்கள் குழுக்களுக்கான எதிர்கால கூட்டுப் பணிக்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கினர் . இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications