'யுரேனியம்!' என்ன செய்யும்? ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு முக்கிய காரணமே இதுதான்!
தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு முக்கிய காரணம் யுரேனியம்தான். யுரேனியத்தை அதிக அளவு ஈரான் செறிவூட்டுகிறது என்பதுதான் பஞ்சாயத்து. அப்படி என்ன இருக்கிறது இந்த யுரேனியத்தில்? ஏன் இது முக்கியம் என்பதை விரிவாக பார்ப்போம்.
யுரேனியம் என்பது அணு மின் நிலையங்களிலும் அணு ஆயுதங்களிலும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் ஒரு கன உலோகமாகும். இது இரும்பு, நிலக்கரி போன்று பூமியில் இயற்கையாகவே காணப்படுகிறது. யுரேனியத்தில் இரண்டு முக்கிய வகைகள் (ஐசோடோப்புகள்) உள்ளன.

யுரேனியம்-238 (U-238)
யுரேனியம்-235 (U-235)
முதல் வகையான இயற்கை யுரேனியம் சுமார் 99.3% எந்த அணுசக்தி செயல்பாடுகளுக்கும் இது பயனுள்ளதாக இருப்பதில்லை. இதை வைத்துக்கொண்டு அணு ஆயுதத்தையோ இதர அணு செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாது.
இரண்டாவது வகை யுரேனியம் வெறும் 0.7% மட்டுமே கிடைக்கிறது. இது அணுசக்தி மற்றும் குண்டுகளுக்குத் தேவையான வகையாகும். ஏனெனில் இது ஆற்றலை எளிதாகப் வெளியிட முடியும். ஆனாலும் இதை அப்படியே பயன்படுத்த முடியாது. அணு குண்டுகளுக்கு, இது சுமார் 90% ஆக செறிவூட்டப்பட வேண்டும்.
யுரேனியம் எவ்வாறு செறிவூட்டப்படுகிறது?
யுரேனியம் ஆக்சைடு, யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு (UF6) ஆக மாற்றப்படுகிறது, இது ஒரு வாயு கலவையாகும். பின்னர் இது அதிக வேகத்தில் சுழல வைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு மிக்சியில் போட்டு அரைப்போமே அந்த மாதிரி. ஆனால் இந்த செயல்முறையின்போது யுரேனியத்துடன் இந்த வாயு கலக்காது. மாறாக, யுரேனியம் 235 தனியாக பிரிந்து வரும். இதைத்தான் செறிவூட்டல் என்று சொல்கிறார்கள். பிரிந்து வரும் யுரேனியத்தை அணு குண்டுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம்.
செறிவூட்டல் நிலைகள் மற்றும் பயன்பாடுகள்:
செறிவூட்டலிலும் நிலைகள் இருக்கிறது. அதாவது, குறைந்த அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம், அதிக அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம். 20% க்கும் குறைவான செறிவூட்டப்பட்ட யுரேனியம், அணு மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. 90% செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படுகிறது.
யுரேனியம் செறிவூட்டல் என்பது மிக முக்கியமான தொழில்நுட்பம். கயிறு மேல் நடக்கும் கதைதான் இது. இந்த செறிவூட்டல் விவகாரம் சர்வதேச கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. இப்படியான கண்காணிப்புகள் மூலம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, அமைதியான பயன்பாட்டிலிருந்து ஆயுத உற்பத்திக்கு திருப்பிவிடுவதைத் தடுக்கிறது. சர்வதேச அணுசக்தி நிறுவனம்தான்(IAEA) இந்த கண்காணிப்பை மேற்கொள்கிறது.
இஸ்ரேல் Vs ஈரான் அணுசக்தி வரலாறு:
2006: ஈரான் யுரேனியத்தை செறிவூட்டத் தொடங்கியது. இது இஸ்ரேலை டென்ஷனாக்கியது
2018: இஸ்ரேலிய இன்டெல் ரெய்டு. அதாவது ஈரானின் ரகசிய அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான ஆவணங்களை இஸ்ரேலின் மொசாட் (Mossad) உளவு அமைப்பு திருடியது.
2010: ஸ்டக்ஸ்நெட் சைபர் தாக்குதல். இதுதான் உலகின் முதல் டிஜிட்டல் ஆயுதம் என்று சொல்லப்படுகிறது. ஈரானின் அணு சக்தி மையத்தை சீர்குலைக்கும் நோக்கோடு இந்த வைரஸ் உருவாக்கப்பட்டு, இஸ்ரேல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
2010-2020: விஞ்ஞானி படுகொலைகள். பல ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாட் ஈரானுக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
2020: ஈரானின் ரகசிய அணுசக்தி திட்டம் அம்பலப்படுத்தப்பட்டது
2020-2021: நடான்ஸ் வெடிப்புகள். நடான்ஸில் உள்ள ஈரானின் முக்கிய அணுசக்தி தளத்தின் மீது இஸ்ரேல் இரண்டு தாக்குதல்களை நடத்தியது.
ஆனால், இதுநாள் வரையில் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கியது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானுக்கு அபார சக்தி இருக்கு.. இப்படி பதிலடி கொடுப்பாங்கனு நினைக்கல.. மிரண்டுப்போய் டிரம்ப் சொன்ன வார்த்தை -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
விஷயம் ரொம்ப தீவிரமாகுது! டிரம்ப் பேச்சை கேட்டு.. ஈரான் மேட்டரில் நுழையும் பிரிட்டன்! -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
இந்தியா செய்த மேஜிக்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க 2 கப்பல்களுக்கு மட்டும் அனுமதி எப்படி? ஜெய்சங்கர் பகிர்ந்த சீக்ரெட் -
துபாய்க்கு போகும் விமானங்கள் ரத்து.. இண்டிகோ நிறுவனம் கொடுத்த முக்கிய மெசேஜ்! -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
ஈராக்கில் நடந்ததை போல.. ஈரானிலும் நடக்கப்போகுது! தரைவழி போருக்கு ரெடியான அமெரிக்கா! -
உலக போரை இழுத்துவிடும் டிரம்ப்? ஐரோப்பிய நாடுகளுக்கு தந்த வார்னிங்.. 'நேட்டோ' பற்றி சர்ச்சை கருத்து -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
சீனா பக்கம் சாயும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பதற்கு புது கண்டிஷன்! டிரம்புக்கு பெரிய தலைவலி -
ஹார்முஸ் ஜலசந்தி இனி ஈரானுக்கு சொந்தமில்லை? கைப்பற்றப்போகும் டிரம்ப்? விரைந்த கொடூர ராட்சசன்












Click it and Unblock the Notifications