அல் கொய்தா தலைவர் கொலை.. முறுக்கும் தாலிபான்கள்.. அமெரிக்காவிற்கு கண்டனம்
காபூல்: அமெரிக்கா டிரோன் தாக்குதல் மூலம் அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை கொலை செய்த நிலையில், இதற்கு தாலீபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது 2020ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான அல் கொய்தாவின் தலைவராக ஒசாமா பின் லேடன் இருந்து வந்தார்.
மிகப்பெரிய தீவிரவாதியாக கருதப்பட்ட அவர் கடந்த 2001-ம் ஆண்டு அமெரிகாவில் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தினார். இதனால் கடும் கோபம் அடைந்த அமெரிக்கா அவரை பாகிஸ்தான் ஸ்கெட்ச் போட்டு சுட்டு கொன்றது.

அல் கொய்தா தலைவர்
அவரது மறைவை அடுத்து கடந்த 2011-ம் ஆண்டு முதல் அல் கொய்தா அமைப்பின் தலைவராக அய்மான் அல் ஜவாஹிரி இருந்து வந்தார். அய்மான் அல் ஜவாஹிரியும் அமெரிக்காவின் நிதி தலைநகரான நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தில் தாக்குதல் நடத்தினார். உலகம் முழுவதும் பெரிதான இந்த சம்பவத்தைஅடுத்து அமெரிக்கா அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை பயங்கரவாத பட்டியலில் சேர்த்து அவரை கொல்வதற்கும் திட்டம் தீட்டி வந்தது. இதற்காக அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பு அவரை ரகசியமாக கண்காணித்து வந்தது.

டிரோன் மூலம் தாக்குதல்
தொடர்ந்து அவரது செயல்களை கண்காணித்து வந்த சிஐஏ உளவு அமைப்பு, பல முறை அவர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டது. எனினும் அவர் அதில் சிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்த அய்மான் அல் ஜவாஹிரியை நேற்று அமெரிக்கா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

வெற்றிகரமாக முடித்துவிட்டோம்
இது குறித்து அவர் கூறுகையில், ''அமெரிக்காவின் அதிபர்களான, புஷ், ஒபாமா, டிரம்ப் ஆகியோரது ஆட்சி காலத்தில் இருந்தே அல் கொய்தா தலைவரான அய்மான் அல் ஜவாஹிரியை அமெரிக்கா தேடி வந்தது. ஆனால் கடந்த ஆண்டில் அய்மான் அல் ஜவாஹிரியின் இருப்பிடத்தை உளவு அமைப்பு உறுதி செய்தது. இதையடுத்து அய்மான் அல் ஜவாஹிரியை கொல்ல நான் உத்தரவிட்டேன். அதன்படி அவர் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கச்சிதமான துல்லிய தாக்குதலை மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் வெற்றிகரமாக முடித்துவிட்டோம்" என்றார்.

தாலீபான் கண்டனம்
இந்த நிலையில், அமெரிக்காவின் செயலுக்கு தாலீபான்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக தாலீபான் செய்தி தொடர்பாளர் சபிஹுல்லா முஜாகித் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச கொள்கைகளை மீறுவதாக உள்ளது. அதேபோல், அமெரிக்க படைகள் பின்வாங்குவதாக கடந்த 2020 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையிலும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications