For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிச்சயம் சீனா மீது போர் தொடுப்போம்.. சந்தேகமே வேண்டாம்.. ட்ரம்ப் ஆலோசகர் போட்ட புது குண்டு

சீனா மீது அடுத்த 10 ஆண்டுகளில் நிச்சயம் போர்த்தொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொள்கைக்குழு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சீனா மீது அடுத்த 10ஆண்டுகளுக்குள் நிச்சயம் போர்த்தொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொள்கைக்குழு ஆலோசகரான ஸ்டீவ் பெனான் தெரிவித்துள்ளார். அதேசமயம் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் போர்த்தொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்துள்ள சீன தெற்காசிய கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தென் சீனக் கடற்பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி வரும் சீன அதிநவீன போர் ஆயுதங்களை வரிசைப்படுத்தி வருகிறது.

இது அண்டை நாடுகளுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது. இந்நிலையில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முதன்மை ஆலோசகர் ஸ்டீவ் பெனான் தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்தார்.

அமெரிக்காவுக்கு 2 அச்சுறுத்தல்கள்

அமெரிக்காவுக்கு 2 அச்சுறுத்தல்கள்

அப்போது தென் சீனக்கடல் பிரச்சனை குறித்து தொப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பெனான் ''அமெரிக்காவுக்கு 2 அச்சுறுத்தல்கள் உள்ளன. ஒன்று சீனா மற்றொன்று இஸ்லாம்'' என்றார்.

சீனா மீது போர்த்தொடுக்கப்படும்

சீனா மீது போர்த்தொடுக்கப்படும்

"சீனா மீது 10 ஆண்டுகளுக்குள் நிச்சயம் போர்த்தொடுக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சீனா பண்டைய பிராந்திய கடற்பகுதியில் மணற்கட்டிகளை கொண்டு செயற்கை தீவுகளை உருவாக்கி வருகிறது. விமானம் தாங்கிய கப்பல்களையும் நிறுத்தி வருகிறது.

ஒருநாள் புரிந்து கொள்வோம்

ஒருநாள் புரிந்து கொள்வோம்

ஒரு நாள் அமெரிக்காவின் முகத்திற்கு முன் அவர்கள் வருவார்கள். அப்போது நம் முகம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்வோம். அது பண்டைய பிராந்திய கடற்பகுதிதான்.

மத்திய கிழக்கு நாடுகள் மீதும் போர்

மத்திய கிழக்கு நாடுகள் மீதும் போர்

அமெரிக்காவைக் காட்டிலும் சீனா அதிகமாக அச்சப்படுகிறது. அவர்கள் கிறிஸ்தவர்களை கண்டு அஞ்சுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகள் மீது மீண்டும் ஒரு பெரிய போர்த்தொடுக்கப்படும் என நினைக்கிறேன்." இவ்வாறு ட்ரம்பின் ஆலோசகர் ஸ்டீவ் பெனான் பேசியுள்ளார்.

ஆலோசகர் போட்ட புது குண்டு

ஆலோசகர் போட்ட புது குண்டு

அமெரிக்க அதிபாராக பதவியேற்று ஒரு மாதம் கூட முடிவடையான நிலையில் ட்ரம்ப் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குண்டைப் போட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் ட்ரம்ப்பின் ஆலோசகர் சீனா மீதும் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் போர்த்தொடுக்கப்படும் என தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Trump’s administration Steve Bannon said that the United States and China will fight a war within the next 10 years over islands in the South China Sea, and there’s no doubt about that. and he said At the same time, the US will be in another major war in the Middle East.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X