For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகம் பார்த்திராத ஒசாமாவின் சடலப் புகைப்படத்தை பத்திரமாக வைத்திருந்த யு.எஸ். வீரர்

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் குண்டு துளைத்த சடலத்தின் புகைப்படத்தை பத்திரமாக வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத் வீட்டில் பதுங்கியிருந்த அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த வீரர் ராப் ஓ நீல் மற்றும் மேத்யூ பிசோனெட் ஆகியோர் சுட்ட குண்டுகள் தான் ஒசாமா மீது பாய்ந்து அவர் இறந்தார்.

US Navy SEAL kept unauthorised picture of Osama bin Laden's corpse

ஒசாமா கொல்லப்பட்டது குறித்து மேத்யூ பிசோனெட் 'நோ ஈஸி டே' என்ற புத்தகத்தை எழுதி பிரபலம் ஆனார். ஒசாமா கொல்லப்பட்டபோதும் சரி, அவரது உடல் கடலில் புதைக்கப்பட்டபோதும் சரி புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த புகைப்படங்கள் வெளியானால் பிரச்சனை ஏற்படும் என்று நினைத்து ஒபாமா நிர்வாகம் அவற்றை வெளியிடவில்லை.

இந்நிலையில் பிசோனெட் குண்டுகள் துளைக்கப்பட்ட ஒசாமாவின் சடலப் புகைப்படம் ஒன்றை இத்தனை ஆண்டுகளாக அனுமதியின்றி பத்திரமாக வைத்திருந்திருக்கிறார். தன் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டு அந்த புகைப்படம் அடங்கிய ஹார்டு டிரைவை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து கடற்படை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A former US navy seal soldier who killed Al Qaeda leader Osama bin Laden kept unauthorised picture of Osama's corpse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X