தாலிபான் வந்துவிட்டது.. 72 மணி நேரம்தான் டைம்.. ஃபைலை எல்லாம் அழிச்சுடுங்க.. பிடன் போட்ட உத்தரவு
காபுல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் எல்லைக்குள் தாலிபான்கள் புகுந்துள்ளது. இதனால் அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஆவணங்களை அழிக்கும்படி அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையிலான மோதல் முடியும் தருவாயை எட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்குள் தற்போது தாலிபான்கள் நுழைந்துள்ளது. காபுலின் எல்லைகள் அனைத்திலும் தற்போது தாலிபான் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக காபுல் நகரத்தை நோக்கி இன்று மாலைக்குள் தாலிபான்கள் படையெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு நாட்களுக்குள் மொத்தமாக ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் செல்லும். ஆப்கானிஸ்தான் அரசு அடுத்த இரண்டு நாட்களுக்குள் அப்புறப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பதவியில் இருந்து நீக்கப்பட்டு தாலிபான்கள் தரப்பு அதிபரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி
இன்று காலையில் ஜலாலாபாத் பகுதியை தாலிபான்கள் கைப்பற்றின. அப்போதே தாலிபான்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதை தொடர்ந்து தற்போது காபுலை தாலிபான்கள் கைப்பற்ற உள்ளன. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் 90 நாட்களுக்குள் கைப்பற்றிவிடும் என்று முன்பு அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. ஆனா எதிபார்த்ததை விட தாலிபான்கள் வேகமாக காபுலை கைப்பற்றி வருகிறது. தாலிபான்கள் எல்லைக்குள் வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து அமெரிக்க அதிகாரிகள் வெளியேறி வருகிறார்கள். அங்கு தூதரகத்தில் இருக்கும் அதிகாரிகள் வரிசையாக வெளியேற தொடங்கி உள்ளனர்.

காத்திருப்பு
அமெரிக்கர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் வெளியேறுவதற்காக, தாலிபான்கள் எல்லையில் தற்போது காத்து இருக்கின்றன. இன்னும் சில மணி நேரங்களில் அங்கு தூதரகத்தில் இருந்து மொத்தமாக அமெரிக்க அதிகாரிகள் வெளியேறிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பே தாலிபான்கள் உள்ளே படையெடுப்பை தொடங்கும். ஏற்கனவே கந்தகார், மஸார் இ ஷெரிப் துணை தூதரகங்களில் இருந்து அமெரிக்க அதிகாரிகள் வெளியேறிவிட்டனர். இந்த தூதரகங்களில் இருந்து இந்திய அதிகாரிகளும் வெளியேறிய நிலையில் காபுல் மட்டுமே மிச்சம் இருக்கிறது.

உத்தரவு
இந்த நிலையில் காபுல் தூதரகத்தில் இருக்கும் கோப்புகள் அனைத்தையும் அழித்துவிடும்படி தூதரக அதிகாரிங்களுக்கு வெள்ளை மாளிகையில் இருந்து உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. shredding மெஷின் எனப்படும் கட்டிங் மெஷின் மூலம் ஆவணங்கள் அனைத்தையும் அழித்துவிடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களில் பல ரகசியங்கள் அடங்கி இருக்கும். முக்கியமாக அமெரிக்க அரசின் பல்வேறு ஒப்பந்தங்கள், விவரங்கள், அரசு வெளியுறவுத்துறை ரகசியங்கள் இதில் இடம்பெற்று இருக்கும்.

தாலிபான்கள்
இதனால் இந்த கோப்புகள் அனைத்தையும் அழிக்கும்படி தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் தாலிபான்கள் வசம் செல்லக்கூடாது. இந்த ஆவணங்கள் கிடைத்தால் அமெரிக்காவிற்கு எதிரான பிரச்சாரத்தை தாலிபான் மேற்கொள்ளும். அதனால் ஆவணங்களை அழித்துவிடுங்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த 72 மணி நேரத்திற்குள் தாலிபான்கள் காபுலை சுற்றி வளைக்கும், ஆனால் தாலிபான்கள் உள்ளே வர மாட்டார்கள் என்று அமெரிக்க அரசுக்கு அந்நாட்டு உளவுத்துறை கூறி உள்ளது.

எச்சரிக்கை
உளவுத்துறை விடுக்கப்பட்ட எச்சரிக்கையை போலவே தாலிபான்கள் இன்று காலை காபுல் எல்லையை சுற்றி வளைத்தது. அதன்பின் எல்லைக்குள் புகுந்த தாலிபான் தற்போது உள்ளே மேற்கொண்டு செல்லாமல் காத்து இருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தை பயன்படுத்திக்கொண்டு தூதரகத்தில் இருக்கும் கோப்புகள், அமெரிக்க கொடி, இலச்சினை உள்ளிட்ட அனைத்தையும் அழிக்கும் அல்லது அப்புறப்படுத்தும் முடிவில் அமெரிக்க படைகள் உள்ளன. அடுத்த ஒரு வாரத்திற்ற்குள் மொத்தமாக தாலிபான்கள் காபுலை கைப்பற்றும் என்று உளவுத்துறை இதில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறை
முன்னதாக தாலிபான் ஆப்கானிஸ்தானை 90 நாட்களுக்குள் கைப்பற்றும் என்று உளவுத்துறை கூறியது. ஆனால் இப்போது வெறும் 1 வாரமாக இதை சுருக்கி உள்ளது. அமெரிக்க உளவுத்துறை தாலிபான் படைகளின் வேகத்தை கணிக்க தவறிவிட்டது என்றுதான் கூற வேண்டும். முன்னதாக அமெரிக்க படைகள் கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தொடங்கியது. அப்போதே தாலிபான்கள் 2 வருடத்திற்குள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் கண்ணில் மண்ணை தூவியது
ஆனால் இப்போது அமெரிக்க உளவுத்துறை, உலக நாடுகள் என்று எல்லோரின் கண்ணிலும் மண்ணை தூவி வெகு சில நாட்களில் மொத்த நாட்டையும் தாலிபான்கள் பிடித்து உள்ளன. அமெரிக்க வரலாற்றில் இது மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்படுகிறது. 20 வருடமாக ஆப்கானிஸ்தானில் போர் நடத்தி, 20 வருடமாக ஆப்கானிஸ்தான் படைகளுக்கு பயிற்சி கொடுத்து, பல மில்லியன் டாலர்களை செலவு செய்தும் கூட.. வெறும் 2 முதல் மூன்று மாதங்களில் மீண்டும் தாலிபான்கள் படைகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி வெற்றி கண்டுள்ளது.

பிடன்
இந்த ஒப்பந்தம் கடந்த வருடம் டிரம்ப் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் படைகள் வாபஸ் பெறப்பட்டது என்னவோ பிடனின் ஆட்சிக்கு கீழ்தான். இதனால் இது பிடனின் அரசியல் லெகசியில் பெரிய கரையாக இருக்கும். ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானிலும், ஈரான், ஈராக்கிலும் படைகளை குவிக்க ஆதரவாக பேசிய தலைவர்களில் பிடனும் ஒருவர். தற்போது அதே பிடன் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களிடம் வீழ்ந்து படைகளை முறையின்றி வெளியேற்றி உள்ளார். அமெரிக்காவிற்கும், அதன் ராணுவத்திற்கும் இது மிகப்பெரிய வீழ்ச்சியாக கருத்தப்படும்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்ற உள்ள நிலையில் இனி அரசியல் ரீதியாக அங்கு என்னென்ன மாற்றங்கள் நடக்கும், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு கொள்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications