For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ட்ரம்ப் ஷார்ப்புன்னா ஷார்ப் அவ்வளவு ஷார்ப்... அறிவாற்றல் சோதனையில் செம மார்க்!

அறிவாற்றல் சோதனையில் அமெரிக்க அதிபர் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும், அவர் மிகவும் ஷார்ப்பானவர் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு கடந்த வாரம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ட்ரம்ப் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடைய நினைவாற்றல் குறித்து நடத்தப்பட்ட சோதனையில் இது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரத்தில் அறிவாற்றல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் ட்ரம்ப் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக முடிவுகள் தெரிவித்துள்ளன. வெள்ளை மாளிகையில் நேவி மருத்துவர் ரான்னி ஜாக்சன் ட்ரம்புக்கு நடத்திய சோதனை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது ட்ரம்ப் மிகுந்த புத்திக்கூர்மை படைத்தவர் என்று மருத்துவர் ரான்னி கூறினார். ட்ரம்ப்பிடம் குறிப்பிட்ட வார்த்தைகளை கொடுத்து அவற்றை நினைவுபடுத்தி கூறச் சொல்வது, ரேண்டம் முறையில் எண்களை கூறி அவற்றை திரும்ப சொல்லச் சொல்வது, ஒரு நிமித்தில் எத்தனை பெயர்களை சொல்ல முடிகிறது உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ட்ரம்ப்புக்கு ஏன் திடீர் சோதனை?

ட்ரம்ப்புக்கு ஏன் திடீர் சோதனை?

திடீரென இந்த அறிவாற்றல் சோதனை நடத்தப்பட்டதற்கு காரணம் இருப்பதாகவும் மருத்துவர் கூறியுள்ளனார். அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் ட்ரம்ப்பின் மனநிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான ட்ரம்ப்

ஆரோக்கியமான ட்ரம்ப்

ட்ரம்ப் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார். மேலும் அவர் தனது அதிபர் காலத்தை முடிக்கும் வரை தனது உடல்நிலையை இதே நிலையில் வைத்துக் கொள்வதற்காக உணவு மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மருத்துவர் ரான்னி கூறியுள்ளார்.

ட்ரம்பே எடுக்கச் சொன்ன சோதனை

ட்ரம்பே எடுக்கச் சொன்ன சோதனை

தன்னுடைய மனநிலை குறித்து அடுத்தடுத்து எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்ரம்ப் தாமாகவே முன் வந்து இந்த சோதனையை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். அறிவாற்றல் சோதனையில் ட்ரம்ப் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதாகவும், அவரும் மேலும் எடை குறைப்பு செய்தால் இன்னும் வேகமாக செயல்பட முடியும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

ஆரோக்கியத்திற்கு குறைவில்லா அதிபர்

ஆரோக்கியத்திற்கு குறைவில்லா அதிபர்

ட்ரம்பிற்கு உடலில் கொழுப்பின் அளவு அதிகம் இருப்பதாகவும் மருத்துவர் ரான்னி தெரிவித்துள்ளார். டயட் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்னைகளைத் தாண்டி ட்ரம்ப்பின் இதய ஆரோக்கியமானது நல்ல நிலையில் இருக்கிறது, அவருக்கு சர்க்கரை நோய் இல்லை என்றும் மருத்துவர் கூறி இருக்கிறார்.

English summary
US President Donald Trump personally requested for cognitive test and in the test conducted last week the result shows he got perfect score and the doctor said Trump is Very sharp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X