அமெரிக்க தாக்குதல் தோல்வி.. அணு உலை அப்படியேதான் இருக்கு! நியூயார்க் டைம்ஸ் ரிப்போர்ட்! டிரம்ப் ஷாக்
தெஹ்ரான்: நேற்று அதிகாலை ஈரானின் மூன்று அணு ஆய்வு மையங்கள் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் மூன்றும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், மிக முக்கியமான அணு ஆய்வு மையமாக கருதப்படும் 'ஃபோர்டோ' சேதமடைந்துள்ளதே தவிர, அழிக்கப்படவில்லை என்று 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி ஊடகம் கூறியிருக்கிறது.
அதாவது அமெரிக்காவின் தாக்குதலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருகின்றனர். இஸ்ரேல் அதிகாரிகள், இதுபற்றி கூறுகையில், "அமெரிக்காவின் தாக்குதல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். ஆனால், ஃபோர்டோ முழுமையாக அழிக்கப்படவில்லை" என்று கூறியுள்ளனர் என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.

அதேபோல பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி, "ஃபோர்டோ தளத்தை அமெரிக்கா முழுமையாக அழிக்கவில்லை. 12 குண்டுகளால் கூட அதை முழுமையாக அழிக்க முடியாது" என்று தெரிவித்திருக்கிறது.
ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்கிறது. எனவே, நாங்கள் அதை தடுக்கிறோம் என்று சொல்லி, ஈரானின் அணு நிலைகள் மீது கடந்த 13ம் தேதி இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. ஈரானில் மொத்தம் மூன்று முக்கியமான அணு நிலையங்கள் இருக்கின்றன.
1. ஃபோர்டோ
2. நடான்ஸ்
3. இஸ்ஃபஹான்
இவை அனைத்தும் மலையை குடைந்து அதற்கு உள்ளே கட்டப்பட்டிருக்கின்றன. எனவே இதனை எளிதில் தாக்கி அழிக்க முடியாது. அந்த வகையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தோல்வியடைந்தது. ஆனால், பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதல், இஸ்ரேலுக்குள் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் சில பாதிப்புகளை சந்தித்தது.
இந்த சண்டை நடந்துக்கொண்டிருக்கும்போதுதான், அமெரிக்கா உள்ளே நுழைந்தது. அந்நாட்டின் மிகவும் ஆபத்தான வெடிகுண்டாக கருதப்படும் GBU-57 குண்டை பயன்படுத்தி ஈரானின் அணு உலைகள் அழிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியது. இந்த குண்டு, நிலத்திற்கு அடியில் பல அடி ஆழத்தில் உள்ள இலக்குகளை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. மட்டுமல்லாது இந்த குண்டை B-2 ரக விமானத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இப்படியாக தாக்குதலுக்கான சாத்தியங்கள் அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று, டிரம்ப் வலியுறுத்த, ஈரான் மறுத்துவிட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் நேற்று அதிகாலை ஈரானின் மூன்று அணு நிலைகள் மீதும் அமெரிக்கா GBU-57 ரக குண்டுகளை வீசியுள்ளது. இந்த தாக்குதல் வெற்றியடைந்தள்ளதாகவும், அனைத்து அணு நிலைகளும் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கின்றன என்றும் டிரம்ப் கூறினார்.
ஆனால், அவர் சொல்வது உண்மையில்லை. GBU-57 குண்டுகள் வெறும் 200 மீட்டர் ஆழத்தில் உள்ள இலக்குகளை மட்டும்தான் அழிக்கும். ஈரானின் ஃபோர்டோ அணு உலை 300 மீ ஆழத்தில் கட்டப்பட்டிருக்கிறது, என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது, நியூயார்க் டைம்ஸ் இந்த தகவல்களை உறுதி செய்திருக்கிறது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications