அமெரிக்காவில் மிஸ் இளவரசிப் போட்டி.. கை கொள்ள முடியாத அளவுக்கு பரிசுகளை வென்ற ஆராதனா!
மாடிசன், விஸ்கான்சின்: அமெரிக்காவின் மாடிசன் நகரைச் சேர்ந்த நமது வாசகர் அகிலா நாராயணன் - கார்த்திக் பாலன் தம்பதியின் மகள் ஆராதனா கார்த்திக் அங்கு நடந்த விஸ்கான்சின் மாகாண அளவிலான தேசிய அமெரிக்க மிஸ் இளவரசிப் போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார்.
விஸ்கான்சின் மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி நடைபெற்றது. 4 முதல் 6 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிதான் மிஸ் இளவரசிப் போட்டி. இதில் ஆராதனா கலந்து கொண்டார்.
ஜூன் மாதம் தொடக்க நிலைப் போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்ற ஆராதனா மாகாண அளவிலான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டி
இறுதிப் போட்டி ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை விஸ்கான்சின் டெல்ஸில் உள்ள சுலா விஸ்டா ரிசார்ட்டில் நடைபெற்றது. அதில் தனி அறிமுகம், நேர்காணல் மற்றும் பார்மல் உடை மேடை நடைப் போட்டி ஆகியவை கட்டாயமாக பங்கேற்க வேண்டியது. அது தவிர சில ஆப்ஷனல் சுற்றுகளும் இடம்பெற்றன. அதில் போட்டோஜெனிக் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் ஆராதனா கலந்து கொண்டார்.

5 பரிசுகள், பாராட்டுகள்
விஸ்கான்சின் மாகாண அளவில் நடந்த போட்டியில் ஆராதனாவுக்கு 5 பரிசுகள், பாராட்டுகள் கிடைத்தன. விஸ்கான்சின் மாகாண அளவிலான இறுதிப் போட்டியாளருக்கான கோப்பை ஆராதனாவுக்குக் கிடைத்தது.

ஸ்பிரிட் ஆப் அமெரிக்கா
இதுதவிர போட்டோஜெனிக் போட்டியில் கலந்து கொண்டதற்காக போர்ட்போலியோ விருது, ஸ்பிரிட் ஆப் அமெரிக்கா கோப்பை, ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் சிறந்த போட்டியாளருக்கான கோப்பை மற்றும் 75 டாலர் ரொக்கப் பரிசு, பெஜன்ட்ரி பத்திரிகை வழங்கும் ஸ்பிரிட் விருது ஆகியவை ஆராதனாவுக்குக் கிடைத்தன.

39 குழந்தைகள்
இளவரசிப் போட்டிப் பிரிவில் விஸ்கான்சின் மாகாணத்திலிருந்து மொத்தம் 39 குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் வயது மற்றும் மாகாண அடிப்படையில் தலா ஐந்து பேர் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

கலிபோர்னியாவில் பட்டப் போட்டி
இவர்கள், கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள தேசிய இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். அந்த இறுதிப் போட்டியில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் முதலிடத்தைப் பிடிப்போர் இறுதிப் பட்டத்திற்குப் போட்டியிடுவர்.
குட்டி இளவரசியைப் பாராட்டுவோம்..!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications