அமெரிக்காவின் பாதுகாப்பு வேலைக்கு ஆகல! ஈரான் அதிரடி அட்டாக்! ஜோர்டான், சவுதி பாதுகாப்பு கேள்விக்குறி
அமான்: அமெரிக்காவுக்கு சப்போர்ட் செய்யும் மத்திய கிழக்கு நாடுகள் மீது, ஈரான் முழு வேகத்தில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குததில், ஜோர்டானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அம்சமான 'தாட்' அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
'தாட்' என்பது அமெரிக்க வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பாகும். உலகம் முழுவதும் மொத்தம் 9 இடங்களில்தான் இவை இருக்கின்றன. 7-ஐ அமெரிக்கா வைத்திருக்கிறது. மீதி 2 அரபு நாடுகளில் உள்ளது. இந்த இரண்டில் ஒன்றுதான் இன்று தாக்கப்பட்டிருக்கிறது. தாட் அமைப்பு 4 அடுக்குகளை கொண்டது.

1. லாஞ்சர்ஸ்
2. 1 ரேடார் (AN/TPY-2)
3. கட்டுப்பாட்டு மையம்
இதில், லாஞ்சர்ஸ் என்பது, ஏவுகணைகளை கொண்டிருக்கும். மொத்தம் 6 ஏவுதளங்கள் இருக்கும். இதில் ஒவ்வொன்றிலும் 8 ஏவுகணைகள் இருக்கும். மொத்தமாக 48 ஏவுகணைகள் இருக்கும்.
இரண்டாவது உள்ளதுதான் முக்கியமான மேட்டர். AN/TPY-2 இந்த ரேடார்தான் மொத்த அமைப்புக்கும் கண் போன்றது. சுமார் 1000 கி.மீ தொலைவிலிருந்து வரும் ஏவுகணைகளை கூட இதனால் கண்டுபிடித்துவிட முடியும். எனவேதான் இதனை கண் போன்றது என்று சொல்கிறார்கள். தற்போது ஜோர்டான் அருகே வைக்கப்பட்டிருந்த AN/TPY-2 ரேடாரைத்தான் ஈரான் தாக்கி அழித்திருக்கிறது.
வளைகுடா நாடுகளில் உள்ள, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு சாதனங்களை அடித்து காலி செய்வதுதான் ஈரானின் முதன்மையான பணியாக இருக்கிறது. எனவேதான் இந்த ரேடாரை காலி செய்திருக்கிறது. இதனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பில் 50% அளவுக்கு ஓட்டை விழுந்திருக்கிறது. இந்த ரேடாரின் விலை ரூ.2,500 கோடி.
இதனால் அச்சமடைந்த டிரம்ப், தென் கொரியாவிலும், இந்தோனேசியாவுக்கு பக்கத்தில் உள்ள குவாம் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 தாட் பாதுகாப்பு அம்சங்களை, உடனடியாக வளைகுடா பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இதனால் ஆசியா பகுதியில் அமெரிக்கா தனது பிடியை தளர்த்துகிறது. இந்த அமைப்புகளும் சேதமடைந்தால், அமெரிக்காவின் மொத்த பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications