For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாஸிதி மக்களைக் காக்க விமானங்கள் மூலம் 85,000 உணவுப் பொட்டலங்கள்- அமெரிக்கா ராணுவம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஈராக்கில் இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள யாஸிதி இனத்தவருக்கு அமெரிக்கா 85 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றது.

ஈராக்கில் "யாஸிதி" சிறுபான்மையின மக்களை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் வேட்டையாடி வருவதை தடுக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

USA militants take care of Yazidi people…

சிஞ்ஜார் மலைகளில் தஞ்சம் புகுந்துள்ள இந்த மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பொட்டலங்களை வீசி வரும் அமெரிக்க விமானங்கள் மற்றொரு புறம் பயங்கரவாதிகளின் சோதனைச் சாவடி பதுங்குமிடங்கள் வாகன அணிவகுப்புகள் மீது வானிலிருந்து விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது.

கடந்த ஐந்து நாட்களில் 85 ஆயிரம் உணவு பொட்டலங்கள், 75 ஆயிரம் லிட்டர் தண்ணீரை விமானங்கள் மூலம் போட்டுள்ளது. எனினும் தரை வழி தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

"யாஸிதி இன மக்கள் முஸ்லிம் கொள்கைகளுக்கு எதிரானவர்கள்; அவர்கள் பேயை வழிபடுகின்றனர். அவர்களை அழிக்க வேண்டும்" எனக் கூறி கொத்து கொத்தாக அவர்களை கொன்று வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் நூற்றுக்கணக்கான யாஸிதி இன பெண்கள் சிக்கியுள்ளனர்.

இந்த இனத்தவர் ஜோராஸ்டிரிய மதம் எனப்படும் சிறுபான்மை மத வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
USA gives 85 thousand food and water parcels to save the people of “yazidis”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X