For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவசர வீடியோ கால் செய்த பிடன்.. உக்ரைன் எல்லையில் குவிக்கப்படும் யு.எஸ் படைகள்.. தாக்க ரெடியான ரஷ்யா!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து படைகளை குவித்து வருவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் பிடன் அவசர அவசரமாக அமெரிக்க படைகளை உக்ரைன் எல்லைக்கு அனுப்பும் முடிவிற்கு வந்துள்ளார்.

Recommended Video

    Ukraine VS Russia | Ukraine எல்லையில் குவிக்கப்படும் US Army | Oneindia Tamil

    அமெரிக்க படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவின் 10 ஆயிரம் வீரர்கள் அடங்கிய நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையிலும், உக்ரைன் உள்ளேயும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இது போக கூடுதலாக 8500 படைகளை தயார் நிலையில் இருக்கும்படி அமெரிக்க அதிபர் பிடன் உத்தரவிட்டுள்ளார். இதனால் உக்ரைனில் போர் பதற்றம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

    உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்? எளிய விளக்கம்உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்? எளிய விளக்கம்

    உக்ரைன் போர்

    உக்ரைன் போர்

    இன்னொரு பக்கம் ஏற்கனவே உக்ரைனின் அனைத்து எல்லைகளிலும், கிரிமியாவிலும் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. ரஷ்யா சார்பாக 1 லட்சம் போர் வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் உக்ரைனை கைப்பற்றுவது தொடர்பாக ரஷ்ய ஆதரவு படைகளுக்கும், நேட்டோ படைகளுக்கும் இடையில் போர் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ரஷ்யாவை பொறுத்தவரை உக்ரைனை மொத்தமாக ஆக்கிரமித்து தனது நாட்டுடன் இணைக்க வேண்டும்.

    உக்ரைன் ரஷ்யா

    உக்ரைன் ரஷ்யா

    ரஷ்யாவை பொறுத்தவரை உக்ரைன் என்பது தங்கள் நாட்டின் ஒரு பகுதி. 1991க்கு முன் சோவியத் யூனியனில் எல்லாம் ஒன்றாக இருந்த நாடுகள்தான். இதை காரணம் காட்டியே உக்ரைனில் ரஷ்யா நிழல் ஆட்சி நடத்தி வந்தது. ஆனால் ஆட்சி மாற மாற உக்ரைன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் கோபம் அடைந்த ரஷ்யா 2014ல் உக்ரைனின் கிரிமியாவை ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அப்போதில் இருந்து உக்ரைனை மொத்தமாக ஆக்கிரமிக்க ரஷ்யா முயன்று வருகிறது.

    ரஷ்யா முயற்சி

    ரஷ்யா முயற்சி

    உக்ரைன் ஐரோப்பா யூனியனுடன் நெருக்கம் ஆக கூடாது, நேட்டோ படைகளில் ஒன்றாக சேர கூடாது என்பதுதான் ரஷ்யாவின் கோரிக்கை. உக்ரைன் அருகே ரஷ்யாவை சுற்றி இருக்கும் குட்டி குட்டி முன்னாள் கமியூனிஸ்ட் தேசங்கள் எல்லாம் இப்பொது அமெரிக்காவின் நேட்டோ படையில் சேர்ந்துவிட்டது. உக்ரைனும் சேர்ந்தால் அது ரஷ்யாவிற்கு சிக்கலாக மாறும். இதன் காரணமாக உக்ரைனை இப்போதே ஆக்கிரமிக்க ரஷ்யா முயன்று வருகிறது.

    போர்

    போர்

    இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் படைகளை குவித்து வருகிறது. பல்வேறு நேட்டோ நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் பிடன் நேற்று அவசர வீடியோ கால் செய்ததும் குறிப்பிடத்தக்கது. நேட்டோ நாடுகளை தயாராக இருக்கும்படி அவர் அறிவுறுத்தினார். ஏற்கனவே ஐரோப்பா நாடுகள் உக்ரைன் அருகே படைகளை குவிக்க தொடங்கி உள்ளது.

    ரஷ்யா

    ரஷ்யா

    ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு ஐரோப்பா நாடுகள், அமெரிக்க நட்பு நாடுகள் படைகளை குவித்து உள்ளது. அமெரிக்கா தனது போர் விமானங்களையும் அங்கே அனுப்ப உள்ளது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்பதால் உக்ரைனில் இருந்து வெளியேறும்படி அமெரிக்கா குடும்பங்களுக்கும், நேட்டோ உறுப்பு நாட்டை சேர்ந்த மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அதிகாரிகள் தவிர மற்றவர்கள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    English summary
    USA president Biden in Talks with Nato leader on Ukrain - Russia issue in the border.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X