பீர் பாட்டிலை ஆசனவாயில் திணித்து.. கொள்ளையர்கள் வெறிச்செயல்! ஐசியுவில் உரிமையாளர்! மிரண்ட டாக்டர்கள்
கராகஸ்: வெனிசுலா நாட்டில் நடந்த கொள்ளை முயற்சி திடீரென விபரீதமான ஒன்றாக மாறியுள்ளது. அந்த நபர் கொள்ளை முயற்சியில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தென் அமெரிக்காவில் வடக்குப் புறத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று வெனிசுலா. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டியுள்ள இந்த நாடு, பல்வேறு இயற்கை அற்புதங்களைக் கொண்டு உள்ளது.
இதன் கரீபியன் கடற்கரையில் ஐலா டி மார்கரிட்டா மற்றும் லாஸ் ரோக்ஸ் தீவுக்கூட்டம் உ்ளன. அதேபோல வடமேற்கில் ஆண்டிஸ் மலைகள் என அழகிய நாடாகவே வெனிசுலா உள்ளது.

வெனிசுலா
இருந்த போதிலும், அங்குள்ள அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெனிசுலாவின் பொருளாதாரம் ரொம்பவே இக்கட்டான சூழலில் உள்ளது. அந்நாட்டின் மொத்த மக்கள் 2.87 கோடி தான். இருப்பினும், அவர்களில் 80 லட்சம் பேர், இன்னும் போதிய உணவு கூட இல்லாமல் சிரமப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து உள்ளது. மேலும், அந்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 94% பேர் இன்னும் கூட ஏழ்மையான நிலையில் தான் வாழ்ந்து வருகின்றனர்.

கொள்ளை
இப்படியொரு ஏழ்மையான நிலையில், வாழ்ந்து வருவதால் அங்குப் பல கொள்ளை சம்பவங்கள் அசல்டாக நடைபெறும். இதைத் தடுக்க அந்நாட்டு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட, அது போதுமானதாக இல்லை. அங்கு ஒவ்வொரு வீட்டிலும் கொள்ளையில் இருந்து தப்புவதற்கே வீட்டின் உரிமையாளர்கள் பல பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பார்கள். இருந்தாலும், அதைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு, கொள்ளையர்கள் திருடிச் சென்றுவிடுவார்கள்.

கொள்ளை முயற்சி
இதனால் அங்கு வீட்டின் உரிமையாளர்கள் பெரும்பாலும், எந்தவொரு பொருட்களையும் வீட்டில் வைக்க மாட்டார்களாம். இதற்கிடையே வெனிசுலாவில் நடந்த கொள்ளை முயற்சி மிகவும் மோசமான ஒன்றாக மாறியுள்ளது. மத்திய வெனிசுலாவில் உள்ள பாலோ நீக்ரோ நகரில் 79 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். அங்குத் தனியாக வசித்து வந்த இவரது வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புகுந்த கொள்ளையர்கள், திருட முயன்றுள்ளனர்.

பீர் பாட்டில்
மொத்தம் 3 திருடர்கள் இவரது வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். வீடு முழுக்க தேடியும் வீட்டில் விலை மதிப்புமிக்க பொருட்கள் எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கடுப்பான கொள்ளையர்கள், வீட்டின் உரிமையாளரைப் பிடித்து மிரட்டியுள்ளனர். இருப்பினும், அவர் எதையும் சொல்லவில்லை. இதனால் கடுப்பான அவர்கள், உரிமையாளரின் ஆசனவாயில் பீர் பாட்டிலைச் செருகித் தாக்கியுள்ளனர். பின் அங்கிருந்து தப்பியும் ஓடிவிட்டனர்.

ஆப்ரேஷன்
இதனால் கடுமையான வலியால் அந்த உரிமையாளர் துடித்துள்ளார். எப்படியோ தட்டுத்தடுமாறி அங்குள்ள மருத்துவமனைக்கும் அவர் சென்றுவிட்டார். அங்கு எடுக்கப்பட்ட ஸ்கேன்களில் அந்த பீர் பாட்டில் அவரது மலக்குடலில் சிக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. வலியால் துடித்து வந்த அந்த நபருக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்யப்பட்டது. பொதுவாக ஆசனவாய்க்கு அருகே மலக்குடலில் எதாவது பொருட்கள் சிக்கியிருந்தால், அதைப் பல நேரங்களில் எளிதாக நீக்க முடியும்.

அறுவை சிகிச்சை
இருப்பினும், மலக்குடல் சுவர்களுக்கு இடையில் அவை சிக்கினால், அதை அகற்றுவது கொஞ்சம் கடினம். மலக்குடலில் குழாயை அனுப்பி, அழுத்தத்தைச் சமன் செய்தே பொருள் அகற்றப்படும். இதற்கு மயக்க மருந்தும் கூட தேவைப்படுகிறது. பொருள் மலக்குடலுக்குள் மிகவும் ஆழமாக இருந்தால், முழு அறுவை சிகிச்சையும் கூட தேவைப்படலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications