
ஜஸ்ட் 10 நிமிஷம் தான்.. 6 பேர் காலி.. சரசரவென சுட்டுத்தள்ளிய 22 வயது இளைஞர்.. நடுங்கும் சிகாகோ
சிகாகோ: அமெரிக்காவில், சுதந்திர தின அணிவகுப்பின் போது, மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 6 பேர் பலியாயினர். 37 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்கா உருவானதன் 246வது ஆண்டுவிழா, அங்கு வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.,.. அனைத்து நகரங்களிலும் அணி வகுப்புகள், சிறப்பு நிகழ்ச்சிகள் என கொண்டாடப்படுகிறது.. இதனால், அந்நாட்டு மக்கள் பூரித்து காணப்படுகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, சிகாகோவில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில், சுதந்திர தின அணிவகுப்பு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது
“சீருடை மனிதன்” துப்பாக்கியை எடுத்து.. 6 பேர் பலி! அலறிய அமெரிக்கா -சோகத்தில் முடிந்த சுதந்திர தினம்

வாணவேடிக்கைகள்
இந்த நிகழ்ச்சி துவங்கிய அடுத்த 10 நிமிடத்தில், திடீரென துப்பாக்கி சூடு நடந்தது.. மர்மநபர் ஒருவர், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட துவங்கினார்... இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினார்கள்.. எனினும், இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியாயினர்.. 37 பேர் ரத்த வெள்ளத்தில் காயமடைந்தனர்...

6 பேர் பலி
இவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இதுகுறித்து உடனடியாக விசாரணையை துவக்கினர்.. அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்.. அப்போது, ஒரு நபர் துப்பாக்கியுடன் நடமாடியது பதிவாகி இருந்தது.. யூனிபார்ம் போன்று ஒரு டிரஸ் அணிந்திருந்தாராம்.. தலையில் தொப்பி போட்டுள்ளார்..

மேற்கூரை
இந்த அணிவகுப்பு நடந்தபோது, அங்கிருந்த கட்டிடத்தின் மேற்கூரையில், சந்தேகம் வரும்படி இங்கும் அங்கும் நடமாடியுள்ளதாக, அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதையடுத்து, அந்த நபர் யார் என்ற விசாரணை ஒருபுறமும், அந்த நபரை தேடும் படலமும் ஆரம்பமானது.. இறுதியில் சம்பந்தப்பட்டவரை சுற்றி வளைத்து போலீசார் பிடித்துவிட்டனர்.. இப்படி கொடூர தாக்குதல் நடத்திய நபரின் பெயர் ராபர்ட் கிரமோ.. இவருக்கு வயது வெறும் 22 என்பது தெரியவந்துள்ளது..

கூல் பதில்
அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அதோ அந்த கட்டிடம் மீது நின்று கொண்டுதான் துப்பாக்கியில் சுட்டேன் என்று கூலாக சொல்கிறாராம்.. தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் கடுமையானகண்டனம் தெரிவித்துள்ளார். எதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று இதுவரை காரணம் தெரியவில்லை.. ஆனால், இந்த நபர் நடமாடிய பகுதியில், உயர் ரகத் துப்பாக்கியை போலீசார் கண்டெடுத்துள்ளனராம்..

செக்யூரிட்டிகள்
இப்போதைக்கு அந்த பகுதியில் நடக்கவிருந்த அணிவகுப்புகளையும், வாணவேடிக்கைகளையும் ரத்து செய்துள்ளனர்.. பொதுமக்களை பாதுகாப்பாய் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்... அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே, இப்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளது, அதிலும் இளைஞர்கள், சிறுவர்களிடம் இந்த துப்பாக்கிகள் அசால்ட்டாக புழங்கிவருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.