For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்கா வருவோரின் செல்போன் ப்ரவுசிங், சோஷியல் மீடியா நடவடிக்கைகளிலும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவரின் போன்களிலில் இருந்து அவர்கள் பயன்படுத்தும் வெப்சைட் மற்றும் கான்டாக்ட்களை சோதித்து பார்க்க அதிகாரிகளுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிரியா உட்பட 7 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தற்காலிகமாக விசா தடை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இத்தோடு இதுபோன்ற வினோத நடவடிக்கைகளை ட்ரம்ப் நிறுத்தப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Visitors to US may be asked to give web browsing details

சிஎன்என் டிவி சேனல் ஒரு தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து அமெரிக்கா வரும் பயணிகள் அனைவரின் செல்போனை சோதித்து பார்த்து, அவர்கள் எந்த வெப்சைட்டுகளையெல்லாம் பார்த்துள்ளார்கள் என்பதையும், அவர்களின் சமூக வலைத்தள செயல்பாடுகளையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் ட்ரம்ப் உள்ளாராம்.

போனிலுள்ள கான்டாக்ட்டுகளையும் பறிமுதல் செய்து சோதித்து பார்க்க உத்தரவிட உள்ளாராம் ட்ர்ம்ப். அதிகாரிகளுடன் சில கட்ட ஆலோசனைகளை அவர் முடித்துள்ளாராம். இது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது என்றபோதிலும், இவ்வாறு தங்கள் விவரங்களை காண்பிக்காதவர்களை அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

English summary
According to a CNN report, Trump and his officials are discussing over a rule for asking foreign visitors to reveal their entire web browsing and social media details.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X