வாய்ப்பு இல்லை ராஜா.. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி எடுத்த அதிரடி முடிவு
கீவ்: போர் முடிவுக்கு வரும் வரை நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடத்தப்படாது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி சுமார் 16 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் போரின் வீரியம் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், சோவியத் உடைந்த பின்னர் தனி நாடுகளாக அறிவித்துக்கொண்டன. தற்போது இந்த நாடுகளை தங்கள் வசம் கொண்டுவரும் வேலையை அமெரிக்கா 'நேட்டோ' அமைப்பு மூலம் முன்னெடுத்துள்ளது. எதிர் பார்த்தபடி பெரும்பாலான முன்னாள் சோவியத் நாடுகள் நேட்டோவில் இணைந்துவிட, உக்ரைனும் இதில் இணைவதாக கையெழுத்திட்டது.

இங்குதான் சர்ச்சை வெடித்தது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படும். இது பக்கத்து நாடான ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே உக்ரைன் இதில் இணைய கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தியது. ரஷ்யாவின் பேச்சை கேட்காத உக்ரைன் இதில் இணைவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தது. எனவே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது.
இந்த போரில் தற்போது வரை சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 15,779 பேர் படுகாயமடைந்துள்ளனர். போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை ரூ.3.44 லட்சம் கோடி மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா செய்துள்ளது.
இன்று மேலும் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. இது உக்ரைனை மிகவும் பலம் வாய்ந்த ராணுவ நாடாக மாற்றியிருக்கிறது. சுருக்கமாக சொல்வதெனில் இந்தியாவின் ஒட்டுமொத்த ராணுவ பட்ஜெட்டில் சுமார் 95% அளவுக்கு உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போரின் தீவிரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது. இரு நாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஆனால் போர் நடந்துக்கொண்டிருப்பதால் இதற்கான தேர்தல் நடப்பது சந்தேகமாக இருந்தது வந்தது. தற்போது இதனை ஜெலென்ஸ்கி உறுதி செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, "நாட்டில் இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது அதிபர் தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என்று எங்கள் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. போர் முடிந்த பின்னர் 90 நாட்களுக்கு பிறகுதான் அதிபர் தேர்தல் நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தைகள் தொடங்க இன்னும் சில மாதங்கள் வரை ஆகலாம் என்று சொல்லப்படும் நிலையில் அடுத்த ஆண்டுக்குள் போர் முடிவுக்கு வருவது சந்தேகம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications