மோசமாக.. அதிர்ச்சி தரும் விதமாக பதிலடி தரப்போகிறோம்.. ஈரானுக்கு வெளிப்படையாக வார்னிங் தந்த இஸ்ரேல்
டெஹ்ரான்: சமீபத்தில் ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நாட்டின் பதிலடி மோசமாகவும் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார்.
இஸ்ரேலை ஈரான் தாக்கி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளோம். எங்கள் தாக்குதல் ஆபத்தானதாகவும், துல்லியமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியமாகவும் இருக்கும். என்ன, எப்படி நடந்தது என்று அவர்களுக்குப் புரியாது.

ஈரான் யோசிக்க முடியாத வகையில்.. யோசிக்க முடியாத இடத்தில் அவர்களை அடிப்போம். அவர்கள் முடிவுகளைப் பார்த்து ஆச்சர்யம் அடைவார்கள்.. அதிர்ச்சி அடைவார்கள், என்று இஸ்ரேல் படை வீரர்களுக்கு ஆற்றிய உரையின் போது கேலண்ட் கூறி உள்ளார்.
எங்களைத் தாக்குபவர்கள் பாதிக்கப்படுவார்கள் மற்றும் அதற்குரிய விலையைக் கொடுப்பார்கள் என்று உலகத்திற்கு தெரிய வேண்டும். அதை தெரியப்படுத்தும் விதமாக இந்த தாக்குதலை நடத்துவோம், என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார்.
லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாஹ்வின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடியாக, அக்டோபர் 1ம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று இஸ்ரேல் அமெரிக்கா இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இஸ்ரேல் அமெரிக்கா இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில்.. ஈரானை எப்படி தாக்க வேண்டும்.. எங்கே தாக்க வேண்டும்.. என்று பதிலடி கொடுப்பது பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் இதை பற்றி ஆலோசனை செய்தார். ஈரானுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும்.. எப்போது தாக்க வேண்டும் என்பது பற்றி தொலைபேசி வழியாக பேசினார். இந்த ஆலோசனை 30 நிமிடங்கள் நீடித்தது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் Karine Jean-Pierre வெளியிட்ட செய்தியில், " இரண்டு நாட்டு தலைவர்களின் பேச்சு நேரடியாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. மேலும் இரு தலைவர்களும் பல விஷயங்களில் தங்கள் கருத்து வேறுபாடுகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் பேசினர். ஈரானுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும்.. எப்போது தாக்க வேண்டும் என்பது பற்றி பேசினர். இஸ்ரேல் தாக்குதல் ஆபத்தானதாகவும், துல்லியமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியமாகவும் இருக்கும். என்ன, எப்படி நடந்தது என்று அவர்களுக்குப் புரியாது என்று எங்களிடம் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இதை பற்றி ஆலோசனைகளை செய்து இருக்கிறோம், என்று கூறி உள்ளார்.
எச்சரிக்கை: சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு ஈரான் முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக வளைகுடா நாடுகளின் வான்வெளியை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிப்பது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் விரைவில் ஈரானுக்கு எதிராக பதிலடி தாக்குதலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு வளைகுடா நாடுகளின் வான்வெளியை இஸ்ரேல் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரானுக்கு எதிராக வளைகுடா நாடுகளின் வான்வெளியை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிப்பது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இப்போது லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவும் கூட.. வளைகுடா நாடுகளின் வான்வெளியை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிப்பது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று ஈரான் வார்னிங் கொடுத்து உள்ளது உங்களிடையே வான்வெளியை, தரைவழியை விமான தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்த அனுமதிக்க கூடாது. அதை மீறினால்.. உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம். ஈரான் கடுமையான நடவடிக்கையை எடுக்கும், என்று ஈரான் எச்சரித்து உள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications