எந்த முறைகேடும் நடக்காது.. அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் பற்றி பேசிய மார்க் ஜூக்கர்பெர்க்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பிரிட்டன், அமெரிக்கர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஜூக்கர்பெர்க்- வீடியோ

  நியூயார்க்: இந்தியாவில் நடக்க இருக்கும் தேர்தலில் எந்த விதமான முறைகேடும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பேசி இருக்கிறார்.

  கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

  மன்னிப்பு கேட்டார்

  மன்னிப்பு கேட்டார்

  நேற்று அமெரிக்க நீதிமன்றத்தில் பேஸ்புக் முறைகேடு குறித்து நடந்த விசாரணையில் மார்க் ஜுக்கர்பெர்க் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். அதில் ''இந்த தவறுக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம். பல மக்களுடைய நம்பிக்கையை நான் வீணாக்கி இருக்கிறேன்'' என்றார். மூன்று முறைக்கும் மேல் அவர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  தவறாக பயன்படுத்த மாட்டோம்

  தவறாக பயன்படுத்த மாட்டோம்

  பேஸ்புக் என்பது சிறந்த கருவி. இதை நாங்கள் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. இதை மோசமாக பயன்படுத்தி இருக்கிறோம். பேஸ்புக் என்ற கருவியை இனி நல்ல காரியங்கள் செய்ய மட்டுமே பயன்படுத்த போகிறோம். முறைகேடுகள் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தார்.

  தேர்தல் முக்கியம்

  தேர்தல் முக்கியம்

  ஏற்கனவே உலகம் முழுக்க நடக்க இருக்கும் தேர்தல் குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் பேட்டி அளித்து இருக்கிறார். இந்தியா, அமெரிக்கா (இடைக்கால தேர்தல்), பாகிஸ்தான், பிரேசில், மெக்சிகோ, ஹங்கேரி ஆகிய நாடுகளில் தேர்தல்கள் நடக்க இருக்கிறது. இதில் பேஸ்புக் கவனம் செலுத்தும் என்று மார்க் ஜூக்கர்பெர்க் கூறி இருந்தார்.

  இந்திய தேர்தலில் என்ன செய்ய போகிறார்கள்

  இந்திய தேர்தலில் என்ன செய்ய போகிறார்கள்

  தற்போது விசாரணையில் இந்திய தேர்தல் பற்றி பேசிய அவர். இந்த தேர்தலில் எந்த விதமான முறைகேடும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம். வாக்காளர்களின் கருத்துக்களை மாற்றும் எந்த விதமான செயலிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம். இனி வரும் எந்த தேர்தலிலும் இதுபோன்ற மோசடிகளை செய்ய மாட்டோம் என்று குறிப்பிட்டார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  We will do everything to ensure safe election in India says, Mark Zuckerberg. India's election is the main focus for Facebook says, Mark Zuckerberg. A few days ago Cambridge Analytica illegally used 50 million people Facebook accounts. It did a major role in America election and Brexit. This issue becomes a major one after Channel -4 sting operation video came out. Now they decided to focus on the election in India.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற