உயிருக்கே ஆபத்து! ரஷ்ய அதிபர் புதின் பயணிக்கும் ‛பேய்’ ரயில்! சிறப்பே இதுதான்.. வியக்கும் நாடுகள்
மாஸ்கோ: உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உயிருக்கே ஆபத்து உள்ளது. இந்நிலையில் தான் உயிருக்கு பயந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்நாட்டில் விமான பயணங்களை தவிர்த்து ‛‛கோஸ்ட் ட்ரெயின்'' எனும் ரகசிய பேய் ரயிலில் பயணம் செய்வதாகவும், அந்த ரயிலில் உள்ள பிரமாண்ட வசதி குறித்த தகவலும் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
உலகல் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் ரஷ்யா உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு சவாலளிக்கும் வகையில் ரஷ்யா விளங்கி வருகிறது. இந்த நாட்டின் அதிபராக விளாடிமிர் புதின் இருக்கிறார்.

இந்நிலையில் தான் ஒருங்கிணைந்த ரஷ்யாவின் ஒருபகுதியாக இருந்த உக்ரைன் தற்போது தனி நாடாக உள்ளது. அதோடு ரஷ்யா-உக்ரைன் இடையே எல்லை பிரச்சனையும் இருக்கிறது. இருநாடுகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் உக்ரைன், அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைய முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. இந்த போர் நடவடிக்கை ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது கடும் கோபத்தில் உள்ளன. ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அந்த நாடுகள் விதித்துள்ளதோடு, உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் புதினின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு புதினும் கூட விமான பயணங்களை தவிர்த்து உள்நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசிய ரயிலில் தான் பயணம் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த ரயிலில் உள்ள சொகுசு வசதி உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதாவது புதின் பயன்படுத்தும் சொகுசு ரயிலின் பெயர் ‛கோஸ்ட் ட்ரெயின்' என்ற பெயரில் இயங்குகிறது. இந்த ரயிலில் ஜிம், மசாஜ் நிலையம், அழகு மையம், ஆடம்பர குளியலறை, மீட்டிங் ஹால் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன. மேலும் புதினுக்கு என்று பிரத்யேகமாக பெட்ரூம் போன்ற வசதியும் சொகுசாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ரயிலில் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ள ஆன்டி ஏஜிங் மெஷின்கள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட அவசர உதவிக்கான கருவிகள், முதலுதவிக்கான மருந்து, மாத்திரைகளும் வைக்கப்பபட்டுள்ளன. மேலும் புதின் இருக்கும் பெட்டி குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதோடு ரயிலில் இருந்தே அதிகாரிகளை தொடர்பு கொள்ள நவீன கம்யூனிகேசன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பேஸ் ரயில் 22 பெட்டிகளுடன் இயங்கும். இந்த ரயிலின் மொத்த மதிப்பு 74 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்த ரயில் மதிப்பில் ரூ.609 கோடி) என கூறப்படுகிறது. இந்த ரயிலை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.130 கோடி வரை செலவு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
2018 முதல் இந்த ரயிலை விளாடிமிர் புதின் பயன்படுத்தி வருகிறார். இருப்பினும் தொடக்கத்தில் அவர் அவ்வப்போது மட்டுமே அவர் ரயில் பயணத்தை மேற்கொள்வார். ஆனால் கடந்த ஆண்டு உக்ரைன் மீது போர் நடவடிக்கையை தொடங்கிய பிறகு அடிக்கடி இந்த ரயிலை விளாடிமிர் புதின் பயன்படுத்தி வருகிறார்.
பொதுவாக விமானத்தில் விளாடிமிர் புதின் பறந்தால் அதனை எதிரிகளால் கண்டுபிடித்து பின்தொடர்ந்து தாக்குதல் நடத்த முடியும். ஆனால் ரயில் பயணத்தை எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாது. மேலும் புதின் பயணிக்கும் இந்த ரகசிய ரயில் போன்று ரஷ்யாவில் இன்னும் சில ரயில்கள் இயங்கி வருகின்றன.
இதனால் எந்த ரயிலில் புதின் செல்வார் என்பது ரகசியம் காக்கப்படுவதோடு, எதிரிகளுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தும். இதுபோன்ற காரணங்களால் தான் விளாடிமிர் புதின் உள்நாட்டில் விமான பயணங்களுக்கு பதில் இந்த பேய் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications