"இந்தியா எங்களுக்கு ரொம்ப முக்கியம்!" சொல்வது கனடா டாப் அமைச்சர்! ஏன் இந்த திடீர் மாற்றம்?
ஒட்டாவா: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான மோதல் தொடரும் நிலையில், கனடா பாதுகாப்புத் துறை அமைச்சர் பில் பிளேயர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா- கனடா உறவு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் எனக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதே இதற்குக் காரணமாகும்.

இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், கனடா தனது குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இருப்பினும், கனடா ஆதாரங்களை வெளியிடாமல் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்து வருகிறது.
இந்தியா கனடா: இதனால் இரு நாட்டு உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த பரபர குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முன்பு, இந்தியாவுடன் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் ஆகியவற்றில் நீண்ட மற்றும் நல்லுறவைக் கனடா வைத்திருந்தது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை மேலும் எளிமையாக்கப் பேச்சுவார்த்தைகளும் கூட நடத்தப்பட்டன.
இதற்கிடையே சர்வதேச ஊடகத்திற்குப் பேட்டி அளித்த அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவை "முக்கியமானது" என்று கூறிய அவர், குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஒரு பக்கம் தொடரும் நிலையில், கனடா இணைந்து பணியாற்றுவது தொடரும் என்றும் பிளேயர் தெரிவித்தார்.
முக்கியமானது: தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவுடனான எங்கள் உறவு இப்போது ஒரு சவாலாக இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்தியா உடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில், சட்டத்தைப் பாதுகாத்து எங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.
அதே நேரத்தில் நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைப் பெறுவதற்கும் எங்களுக்குப் பொறுப்பு உள்ளது.. இப்போது விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உண்மையை நாங்கள் நிச்சயம் கண்டறிவோம். குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அது பெரிய பிரச்சினை தான். ஏனென்றால் கனடா மண்ணில் கனடா குடிமகன் ஒருவரைக் கொன்றது என்பது எங்கள் இறையாண்மையை மீறும் செயலாகும்.
மேலும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் கனடாவின் இருப்பு இன்னும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ இருப்பை அதிகரிக்கவும் ரோந்து பணிகளை அதிகரிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.
இரு நாட்டு உறவு: இந்த விவகாரம் தொடங்கியது முதலே இந்தியா கனடா நாடுகள் மாறி மாறி பதிலடி கொடுத்து வருகிறது. முன்னதாக கடந்த வியாழக்கிழமை தனது மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் இந்திய எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையைக் கனடா எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ளது.
முதலில் இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களைத் திருப்பி அனுப்பினர். அடுத்து மாறி மாறி தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளையும் வெளியிட்டனர். கனடா நாட்டவருக்கு மறு அறிவிப்பு வரும் வரை விசா வழங்கப்போவது இல்லை என்று இந்தியா அறிவித்தது. இந்தச் சூழலில் தான் கனடா பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீரென இப்படிப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications