சீனாவின் ஒற்றை முடிவு.. அமெரிக்காவே ஆடிப்போச்சு.. உடனே டிரம்பிற்கு போன மெசேஜ்! இப்போ நிலைமை என்ன
பெய்ஜிங்: ரேர் எர்த் மெட்டல் எனப்படும் அரிய வகை உலோகங்களின் ஏற்றுமதிக்குச் சீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்திருந்தது. இது சர்வதேச அளவில் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களும் கூட இதனால் பல வகையான சிக்கல்களை எதிர்கொண்டன. இந்த விவகாரத்தில் இப்போது ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் நிலைமை தலைகீழாகப் போய்விட்டது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் உலகம் முழுமையாக இணைக்கப்பட்டு, ஒரு குளோபல் வில்லேஜ் போலவே செயல்படுகிறது. உலகின் ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் மாற்றம் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது. இதனால் ஒரு நாடு வர்த்தகத்தில் போடும் சிறு கண்டிஷன்கள் கூட உலகெங்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

சீனா வைத்த செக்
உலகையே முடக்கும் வகையிலான ஒரு கட்டுப்பாட்டைத் தான் சீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு விதித்தது. அதாவது ரேர் எர்த் மெட்டல் எனப்படும் அரிய வகைத் தாதுக்களின் ஏற்றுமதிக்குச் சீனா கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. ஸ்பெஷல் பெர்மிட் இருந்தால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என அறிவித்தால் உலக வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
டிரம்ப்பிடம் முறையீடு
குறிப்பாக அமெரிக்காவில் இதன் தாக்கம் மோசமாக இருந்தது. கார் உற்பத்தி நிறுவனங்கள் சில வாரங்களில் தங்கள் உற்பத்தியையே நிறுத்த வேண்டிய சூழலும் கூட ஏற்பட்டது. இது தொடர்பாகப் பல முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் டிரம்பை சந்தித்தும் முறையிட்டன. இந்தச் சூழலில் கடந்த ஜூன் மாதம் இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 7 மடங்கு அதிகரித்துள்ளது.
சீனா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அரிய வகை உலோகங்களின் அளவு மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது எலக்ட்ரிக் வாகனங்கள் உட்படப் பல துறைகளுக்கு நல்ல செய்தியாகவே இருக்கிறது.
பின்னணி
இப்போது உலகில் மிக பெரிய ரேர் எர்த் ஏற்றுமதியாளராகச் சீனா இருக்கிறது. சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஜூன் மாதம் மட்டுமே 353 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது மே மாதத்தை விட 660% அதிகமாகும். இதில் இருந்த சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதைத் தொடர்ந்தே மீண்டும் வர்த்தகம் ஆரம்பித்துள்ளது.
சீனாவிடம் கண்ட்ரோல்
உலக நாடுகளுக்குத் தேவைப்படும் அரிய வகை உலோகங்களில் சுமார் 90% சீனாவிடம் இருந்தே செல்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை விதித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடியாகச் சீனா ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அரிய வகை உலோக ஏற்றுமதியைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்த்தது. ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டதால், ரேர் எர்த் மெட்டலை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்றுமதி கடுமையாகக் குறைந்தது. இது சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலியைக் கடுமையாகப் பாதித்தது. சில வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டனர்.
சீனாவின் ஏற்றுமதி
கடந்த மாதம் சீனா ஒட்டுமொத்தமாக 3,188 டன் அரிய வகை உலோகங்களை ஏற்றுமதி செய்தது. இது மே மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட 1,238 டன்களை விட 157.5% அதிகமாகும்.. இருப்பினும், கடந்தாண்டு ஜூன் மாதத்தை விட 38.1% குறைவாகவே இருந்தது. ஜூன் மாதம் தான் உரிமங்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications