"லிப் டு லிப்!" அதுவும் நீருக்கு அடியில்.. விடாமல் தந்த இளைஞர்! நேரலையில் கின்னஸ் சாதனை படைத்த ஜோடி
ரோம்: இத்தாலி நாட்டை சேர்ந்த தம்பதி ஒருவர் படைத்த ரொம்பவே வித்தியாசமான சாதனையின் வீடியோவை கின்னல் ரெக்காட்ஸ் இப்போது பகிர்ந்துள்ளது.
இந்த உலகத்தில் பல்வேறு பிரிவுகளில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு வருகிறது. பலரும் கடுமையாக முயன்று, ஆண்டுக் கணக்கில் முயன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
அதேநேரம் இன்னும் சிலர் ரொம்பவே வினோதமான சில உலக சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். அப்படியொரு வினோத சாதனையைத் தான் இத்தாலி தம்பதி படைத்துள்ளனர்.

கின்னஸ் ரெக்காட்
இத்தாலி நாட்டை சேர்ந்த தம்பதி ஒருவர் ரொம்பவே வித்தியமான சாதனையைப் படைத்துள்ளனர். முத்தம் கொடுப்பதில் இவர்கள் சாதனை படைத்துள்ளனர். முத்தம் கொடுப்பதில் கூடவா கின்னஸ் சாதனை.. அப்படி என்ன சாதனையை இவர்கள் படைத்துள்ளார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இத்தாலியைச் சேர்ந்த தம்பதி ஒருவர் தண்ணீருக்கு அடியே மிக அதிக நேரம் முத்தம் கொடுத்துக் கொண்டதற்காகச் சாதனை படைத்துள்ளனர்.

முத்தம்
கடந்த 2010ஆம் ஆண்டு இத்தாலிய ஜோடி படைத்த இந்த சாதனையின் வீடியோவை இப்போது கின்னஸ் ரெக்கார்ட்ஸ் மீண்டும் பகிர்ந்துள்ளது. இதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தொட்டியில் இறங்கிய இந்த ஜோடி, பக்காவாக இந்த நீண்ட முத்தத்தைக் கொடுத்துள்ளனர். மிச்செல் பியூசரினோ மற்றும் எலிசா தம்பதி தான் இந்த வித்தியமான உலக சாதனையைப் படைத்துள்ளனர். இப்படியே இவர்கள் சுமார் 3.24 நொடிகள் முத்தம் கொடுத்துள்ளனர்.

நீருக்ககு அடியே
கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் நடந்த லோ ஷோ டீ ரெக்கார்ட் என்ற நிகழ்ச்சியில் தான் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கின்னஸ் ரெக்காட்ர்ஸ் தனது தளத்தில், "நீருக்கு அடியே இவர்கள் தந்த முத்தம் 3 நிமிடம் 24 வினாடி 34 பிரேம்கள் நீடித்தது. இந்த சாதனை 2010ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி படைக்கப்பட்டது. இதை இத்தாலியைச் சேர்ந்த மைக்கேல் ஃபுகாரினோ மற்றும் எலிசா லஸ்ஸரினி படைத்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

நீண்ட முத்தம்
அதேநேரம் உலகில் மிக நீண்ட நேரம் முத்தம் கொடுத்த ஜோடி என்ற சாதனை தாய்லாந்தைச் சேர்ந்த தம்பதியிடம் உள்ளது கடந்த 2013 காதலர் தினத்தன்று அவர்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். அப்போது எக்கச்சாய் திரனாரத் மற்றும் அவரது மனைவி லக்சனா 58 மணி நேரம், 35 நிமிடங்கள் மற்றும் 58 வினாடிகள் விடாமல் முத்தம் கொடுத்துள்ளனர். இதற்கு முன்பு 50 மணி நேரம் முத்தம் கொடுத்தே சாதனையை இருந்த நிலையில், அதை இந்த ஜோடி முறியடித்தது.

தாய்லாந்து
இது குறித்து அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிகழ்ச்சி அமைப்பாளர் சோம்ப்ரான் நக்சுட்ராங் கூறுகையில், "நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. சுமார் 2.5 நாட்கள் அவர்கள் முத்தம் கொடுத்தபடியே இருந்தனர். இருப்பினும், இரண்டு நாட்கள் தூங்காததால் அவர்கள் ரொம்பவே சோர்வாக இருந்தனர். மேலும், பல மணி நேரம் நின்று கொண்டே இருந்ததாலும், அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர்" என்றார்..
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications