Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெட்கக்கேடு.." நாஜி வீரருக்கு கவுரவம்! உலகெங்கும் எழுந்த எதிர்ப்பு! முதல்முறையாக வாய் திறந்த ட்ரூடோ

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: நாஜி ராணுவத்தில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல்முறையாகக் கருத்துகளைக் கூறியுள்ளார்.

கனடாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்தார்.

 What Justin Trudeau says about Honouring Nazi-Linked Veteran In canada parliament

இது இரு நாடுகளும் இடையேயான உறவைக் கடுமையாகப் பாதித்தது. இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்த இந்தியா, இதில் ஆதாரங்களை வெளியிடக் கோரியது. இருப்பினும், ட்ரூடோ அரசு ஆதாரங்களை வெளியிடாமல் குற்றஞ்சாட்டுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளது.

நாஜி வீரருக்குக் கவுரவம்: கனடா எதிர்பார்த்ததுப் போல உலக நாடுகள் எதுவும் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் தரவில்லை. இதுவே கனடாவுக்குச் சங்கடம் தான். இதற்கிடையே ஜஸ்டின் ட்ரூடோ அரசு இப்போது மற்றொரு மெகா சிக்கலில் மாட்டியுள்ளது. அதாவது கடந்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடாவுக்கு பயணித்திருந்தார். அப்போது அவர் கனடா நாடாளுமன்றத்திலும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த உக்ரைன் முன்னாள் ராணுவ வீரர் கவுரவிக்கப்பட்டார்.

அவரை ஒட்டுமொத்த கனடா நாடாளுமன்றமும் எழுந்து நின்று கௌரவப்படுத்தியது. அந்த வீரர் உக்ரைன் விடுதலைக்காகப் போராடியவர் என்றும் பாராட்டினார்கள். இதில் விஷயம் என்னவென்றால் அந்த முன்னாள் வீரர் 14ஆவது வேஃபன் கிரண்டியர் பிரிவில் பணியாற்றியவர். இந்த பிரிவு இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, நாஜி ஜெர்மனியில் உருவாக்கப்பட்டதாகும். நாஜி படைகள் யூதர்களை எந்தளவுக்குக் கொன்று குவித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஜஸ்டின் ட்ரூடோ: அப்படியிருக்கும் போது நாஜி படையில் பணியாற்றியவரைக் கவுரவித்த சம்பவம் மிகப் பெரியளவில் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் கனடா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அந்தோணி ரோட்டாவும் மன்னிப்பு கோரியிருந்தார். அதாவது பார்வையாளர் பிரிவில் அமர்ந்திருந்த அந்த நபரைக் கவுரவிப்பது தனது தனிப்பட்ட முடிவு என்றும் அவரது பின்னணி குறித்துத் தெரியாமல் போனதே இதற்குக் காரணம் எனக் கூறி உலகெங்கும் உள்ள யூத சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்பதாக அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையே இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல்முறையாகக் கருத்துகளைக் கூறியுள்ளார். இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் படையில் இருந்த வீரருக்குக் கனடா நாடாளுமன்றம் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது வெட்கக்கேடானது என்றும் சகிக்க முடியாதது என்றும் அவர் தெரிவித்தார். கனடா அரசின் இந்த செயலுக்கு உலகெங்கும் இருக்கும் யூத அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ தவறு நடந்துள்ளதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வெட்கக்கேடானது: கனடா நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாகக் கூறுகையில், "இது கனடா நாடாளுமன்றத்திற்கு மட்டுமின்றி, அனைத்து கனடா வாழ் மக்களுக்கும் மிகப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. வெட்கக்கேடானது என்றும் சகிக்க முடியாதது" என்று அவர் தெரிவித்தார்.

நாஜி படையில் இருந்த அந்த வீரருக்கு மரியாதை கொடுக்கப்பட்டது கனடா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. அங்குள்ள எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் ட்ரூடோ அரசைச் சரமாரியாக விமர்சித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ட்ரூடோ கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சியும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று கனடா சபாநாயகர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+