யார் இந்த பாகிஸ்தான் தாலிபான்கள்?: அவர்களுக்கு என்ன வேண்டும்?
இஸ்லாமாபாத்: பெஷாவர் நகரில் உள்ள பள்ளியில் வெறியாட்டம் நடத்தி 141 பேரை கொன்ற தெஹ்ரீக் இ தாலிபான்களை அடக்க பாகிஸ்தான் அரசால் முடியவில்லை.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவ பள்ளியை அந்நாட்டைச் சேர்ந்த தெஹ்ரீக் இ தாலிபான் தீவிரவாதிகள் தாக்கியதில் 132 குழந்தைகள் உள்பட 141 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இந்த தெஹ்ரீக் இ தாலிபான்கள் யார் என்று பார்ப்போம்.

தெஹ்ரீக் இ தாலிபான்
ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள பழங்குடியின பகுதியான வடக்கு வசிரிஸ்தானைச் சேர்ந்த போராளிகள் தான் தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பினர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் தொடுக்க பாகிஸ்தான் ஆதரவு அளித்ததில் இருந்து ராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். சிறு சிறு குழுக்களாக இருந்த போராளிகள் 2007ம் ஆண்டு தான் தெஹ்ரீக் இ தாலிபான் என்ற அமைப்பாக ஒன்றிணைந்தனர்.

முல்லா
தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பின் தலைவராக முல்லா பஸ்லுல்லா என்பவர் உள்ளார். 2012ம் ஆண்டு சிறுமி மலாலா யூசப்சாயை தாக்கியதற்கு பொற்றுப்பேற்றவர் அவர் தான்.

குறிக்கோள்
பாகிஸ்தானில் ஆட்சி செய்யும் அரசை வீழ்த்திவிட்டு கடுமையான இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தான் தெஹ்ரீக் இ தாலிபானின் குறிக்கோள். அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் தொடர்பு உள்ளது. தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பினர் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம், அரசு அதிகாரிகள், பொது மக்களை தாக்கி வருகின்றனர். இது வரை அவர்கள் ஆயிரக்கணக்கானோரை கொலை செய்துள்ளனர்.

பாகிஸ்தான் அரசு
தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பினர் வசிக்கும் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பலமுறை தாக்குதல் நடத்தி இதுவரை 4 ஆயிரத்தற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் காயம் அடைந்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தாலிபான்களுடன் பேசி அமைதியை நிலைநாட்டுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதரமர் நவாஸ் ஷெரீபால் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. கராச்சி விமான நிலையம் தாக்கப்பட்ட பிறகு தாலிபான்கள் வசிக்கும் வசிரிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications