100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.. பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
ஜெனீவா: இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிபடைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன. தடுப்பூசி மீதான பயம் காரணமாக முதலில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக போட்டு வருகின்றனர்.

அனைவருக்கும் தடுப்பூசி
18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக தடுப்பூசி கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்தது. நாட்டு மக்கள் விரைவாக தடுப்பூசி போடும் வகையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு தடுப்பூசி மெகா முகாம்களும் நடத்தப்பட்டன. அனைத்து மாநிலங்களும் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்று மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

100 கோடி தடுப்பூசி
இந்த நிலையில் இந்தியா இன்று 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. நாட்டில் தடுப்பூசி போட தொடங்கிய 9 மாதங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருமையுடன் டுவிட்டரில் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, '' இந்தியா வரலாறு படைத்துள்ளது. 130 கோடி இந்தியர்களின் அறிவியலின் மாண்பை, கூட்டுமுயற்சியின், செயலாக்கத்தின் வெற்றியை காண்கிறோம்,

டெட்ராஸ் அதானம் பாராட்டு
100 கோடி தடுப்பூசிகளைக் கடந்த இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். நமது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்த சாதனையை அடைய உழைத்த அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள அவர், ' கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களை நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி இலக்குகளை எட்ட முயற்சி செய்த பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்' என்று அவர் கூறியுள்ளார். இதேபோல் தடுப்பூசி இலக்கை எட்ட பக்கபலமாக விளங்கிய மருத்துவ பணியாளர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications