Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரிதாபத்தில் பாகிஸ்தான்.. அரசு விமான நிறுவனத்தை வாங்கிய குஜராத் வம்சாவளி! யார் இந்த ஆரிஃப் ஹபிப்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு சொந்தமாக பிஐஏசிஎல் எனும் விமான நிறுவனத்தை வைத்திருந்தது. தற்போது பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் அந்த விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளது. பாகிஸ்தான் அரசின் விமான நிறுவனத்தை குஜராத்தை பூர்வீகமாக கொண்ட பாகிஸ்தான் தொழிலதிபர் ஆரிஃப் ஹபிப் வாங்கி உள்ள நிலையில் அவரது பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் அரசு சொந்தமாக விமான நிறுவனத்தை வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பெயர் ‛பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் கார்ப்ரேஷன் லிமிடெட் அல்லது பிஐஏசிஎல் (Pakistan International Airlines Corporation Limited or PIACL) என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் அரசு தனது விமான நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது.

இதற்கான ஏலம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த ஏலத்தில் 3 பெரும் நிறுவனங்கள் பங்கேற்றன. லக்கி சிமென்ட், தனியார் விமான நிறுவனமான ஏர்ப்ளூ, மற்றும் முதலீட்டு நிறுவனமான ஆரிஃப் ஹபீப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன.

இதில் பாகிஸ்தான் விமான நிறுவனத்தை முதலீட்டு நிறுவனமான ஆரிஃப் ஹபீப் பெற்றது. பாகிஸ்தான் நாட்டு கரன்சியில் 135 பில்லியனுக்கு அந்த நாட்டின் அரசு விமான நிறுவனத்தை ஆரிப் ஹபீப் நிறுவனம் ஏலம் எடுத்தது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.4,300 கோடியாகும்.

தற்போது பாகிஸ்தான் அரசின் விமான நிறுவனத்தை ஏலம் எடுத்த தொழிலதிபர் ஆரிஃப் ஹபீப்பின் குடும்பத்தினர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவரது பெற்றோர் குஜராத்தில் உள்ள ஜூனாகத் மாவட்டம் பன்ட்வா பகுதியை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

அங்கு தேயிலை வணிகம் செய்து வைத்தனர். 1947 ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது ஆரிப் ஹபீப் குடும்பத்தினர் தேயிலை தோட்டம், சொத்துகளை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு சென்றனர். பாகிஸ்தானின் கராச்சியில் அவர்கள் குடியெபர்ந்தனர்.

இருப்பினும் ஆரிஃப் ஹபீப் கராச்சியில் தான் பிறந்து அங்கேயே வளர்ந்தார். அவருக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை. மாறாக அவரது குடும்பத்தினர் இந்தியாவில் பிறந்தவர்கள். ஆரிஃப் ஹபீப் பாகிஸ்தானில் 1970ம் ஆண்டில் பங்குச்சந்தை தரகராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு தொழிலதிபராக மாறினார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் அவர் தனது தொழிலை விரிவுப்படுத்தினார். முதலீட்டு நிறுவனம், நிதி சேவை, ரியல் எஸ்டேட், சிமென்ட், உரம், எரிசக்தி மற்றும் எஃகு போன்ற பல துறைகளில் இவரது நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது. அதாவது சுமார் ரூ.4,500 கோடியாகும்.

பொதுவாக அரசு சார்ந்த நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்போது அதனை குறிவைத்து வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஆரிஃப் ஹபீப். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அரசு விமானத்தை சொந்தமாக்கி உள்ளார்.

மேலும் இவரது நிறுவனம் அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறது. பாகிஸ்தானின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான "சித்தாரா-இ-இம்தியாஸ்" உட்பட பல விருதுகளை இவர் பெற்றுறுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+