கத்தார் விமான தளத்தை தாக்க போகிறோம்.. டிரம்புக்கு முன்கூட்டியே மெசேஜ் சொன்ன ஈரான்.. ஏன் தெரியுமா?
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் அமெரிக்கா நுழைந்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு நேற்று ஈரான் பதிலடி கொடுத்தது. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல் உதெய்த் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் பற்றி முன்கூட்டியே அமெரிக்கா, கத்தாருக்கு ஈரான் தகவல் அளித்த நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலுக்குள் இன்று அமெரிக்கா நுழைந்தது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா இன்று அதிகாலையில் திடீரென்று தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் நேற்று பதிலடி கொடுத்தது. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலால் போர் இன்னும் தீவிரமாகும் என்று கருதப்பட்டது. ஆனால் இன்று ஒருவழியாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன், டிரம்ப் பேசினார். அதேபோல் ஈரான் பிரதிநிதிகளுடன் அமெரிக்க பிரதிநிதிகள் பேசினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து 3 நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
இதன்மூலம் இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்து வந்த போர் 12வது நாளில் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல்-உதெய்த் விமான தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு முன்பு அதுபற்றி கத்தார் மற்றும் அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்தது. இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் உறுதி செய்திருந்தார். இதுபற்றி அவர் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் தான் ஈரான் எதற்காக கத்தார், அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தாக்குதல் பற்றி தகவல் அளித்தது என்பது பற்றி பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது. அதாவது ஈரான் தன் மீது தாக்கிய அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. இந்த பதிலடிக்கு அடையாளம் கொடுக்க விரும்பியது. இதனால் நேரடியாக கத்தார் மற்றும் அமெரிக்காவுக்கு ஈரான் தாக்குதல் பற்றி தகவல் அளித்தது. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல்-உதெய்த் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தது.
இந்த அல்-உதெய்த் விமான தளம் கத்தார் தலைநகர் தோஹாவின் தென்மேற்கு பகுதியில் பாலைவனத்தில் அமைந்துள்ளது. அதனை தான் குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானை எடுத்து கொண்டால் கத்தாரை நோக்கி மொத்தம் 14 ஏவுகணைகளை அனுப்பியது. இந்த ஏவுகணைகளை கத்தாரின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி கத்தார், அமெரிக்கா உள்பட பிற படையினர் இணைந்து இடைமறித்து தடுத்தனர். மொத்தம் 13 ஏவுகணைகள் தடுக்கப்பட்ட நிலையில் ஒரு ஏவுகணை மட்டும் விழுந்தது. அந்த ஏவுகணை விமான தளத்தை விட்டு விலகி சென்றதாலும், யாருக்கும் சேதம் ஏற்படுத்தாது என்பதாலும் அது மட்டும் கத்தாரில் காலி நிலத்தில் விழுந்தது.
இந்த விமான தளத்தை அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன் உள்பட பிற வெளிநாட்டு படையினர் பயன்படுத்தி வருகின்றனர். கத்தார் படையும் இந்த விமான தளத்தை பயன்படுத்தி வருகிறது. இதனால் திடீர் தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தும். அதோடு மோதலை இன்னும் தீவிரமாக்கும் என்று ஈரான் நினைத்தது. இதனை தவிர்க்க முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதல் என்பது ஈரானை சீண்டினால் உரிய பதிலடி தருவோம் என்பதை எடுத்து கூறும் வகையில் நடத்த வேண்டும் என்பதை உலகுக்கு விளக்க வேண்டும் என்று தான் ஈரான் நடத்தி உள்ளது. இதன்மூலம் தொடர்ந்து மோதலை முன்னெடுக்க விரும்பவில்லை. இத்துடன் மோதலை முடித்து கொள்ளலாம் என்ற சிக்னலை ஈரான், அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications