மூழ்கிக் கொண்டிருக்கிறோம்.. திடீரென தலைநகரை மாற்றிய இந்தோனேசியா.. காரணத்தை கேட்டா கலங்கிடுவீங்க!
ஜகர்தா: உலக நாடுகள் பல காலநிலை மாற்றம்.. பெருந்தொற்று.. விலைவாசி உயர்வால் திணறி வரும் நிலையில் இந்தோனேசியா தனது நாட்டின் தலைநகரை மாற்றி உள்ளது. இந்தோனேசிய அரசின் இந்த முடிவிற்கு பின் அதிர்ச்சி தரும் காரணங்கள் உள்ளன.
உலகம் முழுக்க காலநிலை மாற்றம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. இனி வரும் நாட்களில் நாம் இயற்கை பேரிடர்களுக்கு இடையில்தான் வாழ வேண்டும் என்று ஜநாவின் காலநிலை மாற்ற அறிக்கையும் கூட சமீபத்தில் தெரிவித்தது. உலகம் முழுக்க வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
இதனால் பருவமழை மாறி பொழிகிறது. இதனால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்த்து கொண்டதே வருகிறது. எனவே பல முக்கிய நகரங்கள் இதனால் நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாகவும் காலநிலை மாற்ற அறிக்கை எச்சரிக்கை விடுத்தது.

சென்னை மழை
இந்த காலநிலை மாற்றம் காரணமாக சென்னையில் கூட சமீபத்தில் வானிலை மாற்றங்களை கணிக்க முடியாமல் போனது. இப்படிப்பட்ட நிலையில்தான் இதே காலநிலை மாற்றம் என்ற காரணத்தால் இந்தோனேசியா தனது தலைநகரை மாற்றி உள்ளது. இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவை கைவிட அந்நாட்டு அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதற்கான சட்ட திருத்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை கொஞ்சம் கொஞ்சமாக கடல் ஆக்கிரமித்து வருகிறது.

கடல் ஆக்கிரமிப்பு
அங்கு கடந்த 10 வருடங்களில் கடல் வேகமாக ஊருக்குள் வந்து உள்ளது. இதனால் 8 அடி வரை நிலப்பரப்பு கடலுக்குள் சென்று உள்ளது. முக்கியமாக ஜகர்தாவின் வடக்கு பகுதியை தொடர்ந்து தண்ணீர் சூழ்ந்து வருகிறது. வருடா வருடம் 25 செமீக்கும் அதிகமாக கடல் நீர் இங்கே உள்ளே வந்து கொண்டு இருக்கிறது. உலகிலேயே வேகமாக நீரில் மூழ்கும் நகரம் ஜகர்தாதான். அங்கு 10 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள்.

கடல் நீ ர்புகுந்தது
வரும் 2025ல் அதாவது வெறும் 6 வருடங்களில் அங்கு 5 கிமீ தூரத்திற்கு தலைநகர் ஜகர்தா கடலுக்குள் சென்றுவிடும். தற்போது இருக்கும் பிரதமர் அலுவலகம் வரை கடலுக்குள் சென்றுவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிக கடுமையான மக்கள் தொகையால் அப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக வாழ தகுதியற்ற நிலையை அடைந்துள்ளது.குடிநீர் இல்லை, போதுமான எரிபொருள் இல்லை, புதிதாக தொழில் தொடங்க இடம் இல்லை, இருக்கிற இடமும் கடலில் மூழ்குகிறது.

மோசமான நிலை
அங்கு 1949 இந்தோனேசியா சுதந்திரத்தில் இருந்தே ஜகர்தாதான் தலைநகராக இருந்தது. இப்போது அங்கு நிலைமை மோசமாகி உள்ளதால் தற்போது அங்கு தலைநகரை மாற்ற முடிவெடுத்து இருக்கிறார்கள். பல வருட திட்டத்திற்கு பின் இந்த தலைநகர் மாற்ற பணிகள் தொடங்குவதாக பிரதமர் ஜோகோ விடோடா தகவல் தெரிவித்து இருக்கிறார். 2019ல் இதற்கான அறிவிப்பு வந்த பின் கொரோனா தாக்கியதால் இந்த பணிகள் முடங்கின. இப்போது இந்தோனேசியாவின் புதிய தலைநராக நுசாண்டாரா அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் மாற்றம்
நுசாண்டாரா என்பது தீவுகளின் கூட்டம் என்று பொருள்படும் வார்த்தை ஆகும். ஜாவா தீவின் பூர்வகுடி மக்கள் வாழ்ந்த பகுதி ஆகும் இது. கிழக்கு கலிமாண்டான் என்ற இடத்தில் இந்த நுசாண்டாரா தலைநகர் அமைக்கப்பட உள்ளது. காஜா மாதா என்ற இந்து மன்னர் 1336ல் இந்த பகுதியை ஆண்டு வந்ததாக வரலாறு. இந்த பகுதிதான் இந்தோனேசியாவை ஒருங்கிணைத்த இடம் என்று வரலாறு கூறுகிறது.

புதிய தலைநகர்
இதனால் இதே இடத்திற்கு மீண்டும் தலைநகரை மாற்ற இந்தோனேசியா முடிவு செய்துள்ளது. சுற்றி சுற்றி காடுகள் சூழ்ந்த, அதிக அளவு வளங்கள் கொண்ட, எண்ணெய்கள் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதி ஆகும் இது. 80 நகரங்களை பரிசீலனை செய்து கடைசியில் இந்த காட்டு பகுதியை இந்தோனேசிய அரசு இறுதி செய்துள்ளது. காலநிலை மாற்றத்தால் வேறு வழியின்றி கடைசியில் காட்டு பகுதிக்கு குடியேற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

வேறு வழி இல்லை
256,142 ஹெக்டேர் பரப்பில் இந்த தலைநகர் அமைக்கப்பட உள்ளது. இயற்கையோடு இணைந்த வகையில் இந்த தலைநகர் உருவாக்கப்பட உள்ளது. மக்கள் இந்த தலைநகரில் இயற்கையோடு நெருக்கமான வாழ்க்கையை வாழ முடியும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 32 மில்லியன் டாலர் செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதன் முதல் கட்ட பணிகள் இன்னும் 2 வருடங்களில் முடியும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications