Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு அருகே அரக்கோணம் எல்லாம் பழசு! திடீர்னு கிரீஸில் வீடுகளை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்! ஏன்

Subscribe to Oneindia Tamil

ஏதென்ஸ்: நம்ம நாட்டில் டெல்லி, மும்பை உள்ளிட்ட நாடுகளில் ரியல் எஸ்டேட் சந்தை உச்சம் தொட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். மும்பையில் சின்ன இடமே பல கோடி ரூபாய்க்கு கூட அசாட்லாக விற்பனையாகும். இதனால் தானோ என்னவோ, இப்போது இந்தியர்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கிரீஸ் நாட்டில் சொத்துகளை வாங்கி குவிக்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

சில காலத்திற்கு முன்பு வரை சென்னைக்கு மிக அருகே எனச் சொல்லி செங்கல்பட்டு, அரக்கோணம் வரை எல்லாம் நிலத்தை விற்றார்கள். ஆனால், இப்போது அங்கும் விலை ஏறிவிட்டது.

greece offbeat world

கிரீஸ் முதலீடு: இதனால் இப்போது அது கிரீஸ் வரை சென்றுவிட்டது. ஆமாம்.. கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை கிரீஸ் நாட்டில் இந்தியர்கள் ரியல் எஸ்டேட் சொத்துகளை வாங்கி குவித்து இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் இந்தியர்கள் சொத்து வாங்கியது சுமார் 37 சதவீதம் அதிகரித்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். திடீரென இந்தியர்கள் இந்தளவுக்குச் சொத்துகளை வாங்கி குவிக்க என்ன காரணம் என்று உங்களுக்குக் குழப்பம் இருக்கலாம்.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கிரீஸ் நாட்டில் புதிய ஒழுங்குமுறை சட்டங்கள் அமலுக்கு வருகிறது. அதற்கு முன்பு அங்கு கோல்டன் விசா திட்டத்தின் கீழ் நிரந்தர ரெஸ்டென்சி உரிமத்தைப் பெறவே இந்தியர்கள் இப்படி நிலத்தை வாங்கி தள்ளுகிறார்கள்.

என்ன காரணம்: கிரீஸ் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் 2013இல் கொண்டு வரப்பட்டது. இந்த கோல்டன் விசா திட்டத்தின் கீழ் கிரீஸ் நாட்டின் சொத்துக்களில் முதலீடு செய்வோருக்கு நிரந்தர ரெஸ்டென்சி உரிமம் வழங்கப்படும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியே வசிக்கும் மக்கள் அங்கு நிரந்தரமாக செட்டிலாக இது சிறந்த வாயப்பாக இருந்தது.

இந்த விதிகளின் கீழ் குறைந்தபட்சம் €250,000 (ரூ. 2.2 கோடி) முதலீடு செய்திருக்க வேண்டும். ஐரோப்பாவின் மற்ற எந்த நாட்டிலும் இவ்வளவு குறைந்த தொகையை முதலீடு செய்தால் நிரந்தர ரெஸ்டென்சி உரிமம் கிடைக்காது என்பதால் இது சிறந்த ஆப்ஷனாக இருந்தது. இதனால் பலரும் ரூ. 2.2 கோடி முதலீடு செய்து நிரந்தர ரெஸ்டென்சி வாங்கிக் கொண்டார்கள்.

புதிய விதி: இதனால் ஏதென்ஸ், தெசலோனிகி, மைகோனோஸ் மற்றும் சாண்டோரினி போன்ற முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் சந்தை உச்சம் தொட்டது. தேவையும் அதிகரித்தது. இதைக் கணக்கில் கொண்டு நிரந்தர ரெஸிடென்சி உரிமத்தைப் பெறுவதற்கான உச்ச வரம்பை உயர்த்தியது. அதன்படி வரும் செப். 1ம் தேதி முதல் இந்த குறிப்பிட்ட பிராந்தியங்களில் குறைந்தபட்சம்€800,000 (சுமார் ₹ 7 கோடி) முதலீடு செய்தால் மட்டுமே நிரந்தர ரெஸிடென்சி உரிமம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு நிரந்த ரெஸிடென்சி உரிமத்தை வாங்க வேண்டும் என்பதற்காகவே கடந்த சில மாதங்களில் அங்கு அதிகளவில் இந்தியர்கள் முதலீடு செய்வதாக லெப்டோஸ் எஸ்டேட்ஸின் குளோபல் மார்க்கெட்டிங் இயக்குநர் சஞ்சய் சச்தேவ் கூறுகிறார். கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடங்கள், அதுவும் பணிகள் முடிக்க 12 மாதங்கள் வரை ஆகும் திட்டங்களில் கூட இந்தியர்கள் அதிகம் முதலீடு செய்வதாகவும் சஞ்சய் கூறுகிறார்.

எதற்காக: அதிக முதலீட்டை ஈர்ப்பது, அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சியை ஊக்குவிப்பது, வளர்ச்சி குறைவான பகுதிகளில் அதிக முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட காரணங்களுக்காகவே இந்த கிரீஸ் தனது கோல்டன் விசா விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

நமக்கு என்ன லாபம்: கிரீஸ் எங்கோ இருக்கிறது.. இதில் முதலீடு செய்வதால் இந்தியர்களுக்கு என்ன லாபம் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. ஆனால், இதில் பல நன்மைகள் உள்ளன. முதலில் கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாக இருப்பதால்.. இங்கு நிரந்தர ரெஸிடென்சி உரிமத்தைப் பெற்றால்.. மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் சென்று வரலாம்.

மேலும், கிரீஸ் நாட்டில் வாடகை மூலமாகவே ஆண்டு தோறும் 3- 5 சதவிகிதம் வரை நமக்குக் கிடைக்கும். அதேபோல கிரீஸ் நாட்டின் சொத்துகளின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதன் சொத்து மதிப்பு சராசரியாக 10% உயர்ந்துள்ளதாம். குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கிடைக்கும் சுகாதாரம், கல்வி, எளிதாக நிறுவனம் தொடங்குவது என அனைத்து வாய்ப்புகளும் ஒருவருக்குக் கிடைக்கும். இதன் காரணமாகவே குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை உயர்வதற்குள்ள அங்கு முதலீடு செய்ய வரிசைகட்டி நிற்கிறார்கள் இந்தியர்கள். உங்க கிட்டயும் 2.2 கோடி இருந்தால் சொல்லுங்க.. சும்மா ஒரு நிலத்தை வாங்கி போட்டுவிட்டு, அங்கு பேமஸான சௌவ்லகி உணவைச் சாப்பிட்டு வரலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+