For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு பிரவுன்! ராஜ்நாத் சிங்கிற்கு வெள்ளை! குதிரை பரிசளிக்கும் மங்கோலியாவின் பின்னணி காரணம்

Google Oneindia Tamil News

உலான்பட்டர்: பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மங்கோலியா நாட்டு அதிபர் உக்னாகின் குருல்சுக் வெள்ளை நிறத்தில் குதிரை பரிசளித்துள்ளார். இதற்கு ராஜ்நாத் சிங் ‛தேஜஸ்' என பெயரிட்டுள்ளார். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான், மங்கோலியா நாடுகளுக்கு சென்றார். ஒரு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மங்கோலியா செல்வது இதுதான் முதல் முறையாகும்.

இந்நிலையில் 5ம் தேதி மங்கோலியா சென்ற ராஜ்நாத் சிங் 7 ம் தேதி வரை அங்கு இருந்தார். ராஜ்நாத் சிங் அந்த நாட்டின் அதிபர் உக்நாகின் குருல்சுக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தபேச்சுவார்த்தையின்போது இருநாட்டின் உறவுகள் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டது.

ஆணவம்.. நீங்க தர்மம் செய்யலியே.. ரேஷனில் மோடி படம் எதுக்கு? நிர்மலா சீதாராமனை விளாசிய பிரகாஷ் ராஜ் ஆணவம்.. நீங்க தர்மம் செய்யலியே.. ரேஷனில் மோடி படம் எதுக்கு? நிர்மலா சீதாராமனை விளாசிய பிரகாஷ் ராஜ்

 வெள்ளை நிற குதிரை பரிசு

வெள்ளை நிற குதிரை பரிசு

இந்த வேளையில் மங்கோலியா அதிபர் உக்னாகின் குருல்சுக், ராஜ்நாத்சிங்கிற்கு பரிசாக வெள்ளை நிறத்தில் குதிரை ஒன்றை வழங்கினார். இதையடுத்து குதிரையுடன் ராஜ்நாத் சிங் இருக்கும் படத்தை அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛மங்கோலியாவின் சிறப்பு நண்பரிடம் இருந்து சிறந்த பரிசு கிடைத்துள்ளது. வசீகரமான இந்த அழகுக்கு தேஜஸ் என பெயர் சூட்டியுள்ளேன். அதிபர் குருல்சுக்கிற்கும், மங்கோலியாவுக்கும் நன்றி'' என்றார்.

 மோடியை தொடர்ந்து ராஜ்நாத்சிங்

மோடியை தொடர்ந்து ராஜ்நாத்சிங்

முன்னதாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் 2015ல் மங்கோலியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது மங்கோலிய பிரதமராக இருந்த சிமெட் சாய்கான்பிலெக், பிரவுன் நிறத்திலான பந்தய குதிரை ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார். இந்த குதிரைக்கு ‛காந்தகா' என பெயரிடப்பட்டது. அதன்பிறகு தற்போது ராஜ்நாத் சிங்கிற்கு குதிரை வழங்கப்பட்டுள்ளது.

3 மில்லியன் குதிரை

3 மில்லியன் குதிரை

பொதுவாக மங்கோலியாவுக்கு செல்லும் பல தலைவர்களுக்கு குதிரை பரிசாக வழங்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது மங்கோலியாவில் அதிகளவில் குதிரை உள்ளது. அதன்படி மங்கோலியாவில் 3 மில்லியனுக்கும் (மில்லியன் என்பது 10 லட்சம்) அதிகமான குதிரைகள் உள்ளன. அதன்படி 30 லட்சம் குதிரைகள் உள்ளன.

மக்கள் தொகைக்கு நிகராக..

மக்கள் தொகைக்கு நிகராக..

மங்கோலி நாட்டின் மக்கள் தொகை என்பது 2020 நிலவரப்படி 32 லட்சமாகும். ஆனால் நாட்டில் உள்ள குதிரையின் எண்ணிக்கை என்பது 30 லட்சமாகும். அதாவது நாட்டின் மக்கள் தொகைக்கு சமமான அளவில் குதிரை உள்ளது. மேலும் 21ம் நூற்றாண்டிலும் கூட மங்கோலியா குதிரையை அடிப்படையாக கொண்ட கலாச்சாரத்தை கொண்டுள்ளது. இதனால் பிற நாட்டு தலைவர்களுக்கு அந்நாட்டு தலைவர்கள் தொடர்ந்து குதிரைகளை பரிசளித்து வருகின்றனர்.

English summary
Following Prime Minister Narendra Modi, Union Defense Minister Rajnath Singh was gifted a white horse by Mongolian President Ugnakin Kurulchuk. Rajnath Singh named it as Tejas''. There is an important point behind this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X