For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் வரவில்லை.. ஆணவத்தின் உச்சத்தில் நேபாளம்.. பின்னணியில் நடந்த சம்பவம்!

நேபாளத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தும் கூட, நேபாளம் பிரதமர் சர்மா ஒலி அதை ஏற்றுக்கொள்ளாமல் அந்நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

காத்மண்டு: நேபாளத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தும் கூட, நேபாளம் பிரதமர் சர்மா ஒலி அதை ஏற்றுக்கொள்ளாமல் அந்நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்தியாவில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து புதிய வரைபடம் ஒன்றை அந்த நாடு வெளியிட்டு உள்ளது. இதை அந்நாட்டின் இரண்டு அவைகளிலும் பிரதமர் சர்மா தாக்கல் செய்துள்ளார்.

இந்த புதிய வரைபடம் நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. இந்தியாவுடன் நேபாளம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்க்கப்பட்ட நிலையில் அதற்கான கதுவுகள் மூடப்பட்டுள்ளது.

காரில் தூங்கியவரை சரமாரியாக சுட்ட போலீஸ்.. அமெரிக்காவில் கருப்பின இளைஞர் படுகொலை.. பகீர் காட்சிகள்!காரில் தூங்கியவரை சரமாரியாக சுட்ட போலீஸ்.. அமெரிக்காவில் கருப்பின இளைஞர் படுகொலை.. பகீர் காட்சிகள்!

நேபாளம் புதிய வரைபடம்

நேபாளம் புதிய வரைபடம்

இன்னும் இந்த மேப் அந்நாட்டு மேலவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதிபரின் ஒப்புதலை பெற வேண்டும். ஆனால் இது சம்பிரதாயம்தான். கண்டிப்பாக அந்த மேப் திங்கள் கிழமைக்குள் அமலுக்கு வந்துவிடும். இந்த நிலையில் நேபாளத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தும் கூட, நேபாளம் பிரதமர் சர்மா ஒலி அதை ஏற்றுக்கொள்ளாமல் அந்நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்தியா தொடர்ச்சியாக அளித்த வாய்ப்புகளை நேபாளம் வேண்டும் என்றே நிராகரித்து உள்ளது.

இந்தியா என்ன சொன்னது

இந்தியா என்ன சொன்னது

நேபாளம் உடன் மே மாத தொடக்கத்தில் சண்டை வந்த உடனே இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் நேரடியாக நேபாளத்தின் வெளியுறவுத்துறை செயலாளர் உடனே பேச்சுவார்த்தை நடத்தினார். இவர்கள் இருவரும் போன் காலில் பேசினார்கள். அதோடு வீடியோ காலிலும் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதோடு நேபாளத்தின் வெளியுறவுத்துறை செயலாளர் இந்தியாவிற்கும் கூட வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

வரவே இல்லை

வரவே இல்லை

அப்போதே இரண்டு நாட்டு பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு விடுத்து இருந்தது. 4 முறைக்கும் மேலாக இந்தியா நேபாளத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் ஒருமுறை கூட நேபாளம் இந்த பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்கவில்லை. அதோடு இந்தியா சீனாவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. எங்களோடு பேச அவர்களுக்கு நேரம் இல்லை என்று பச்சை பொய்யை அந்நாட்டு வெளியுறவுத்துறை கூறியது.

பிரதமர் சர்மா ஒலி

பிரதமர் சர்மா ஒலி

அதோடு அந்நாட்டு பிரதமர் சர்மா, நாங்கள் இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் இந்தியா அதற்கு தயாராக இல்லை. எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் தயாராக இல்லை என்று என்று பாராளுமன்றத்திலேயே தவறான தகவலை கொடுத்தார். அதாவது இந்தியா பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே இல்லை என்று நேபாளம் தொடர்ந்து பொய்களை கூறி வந்தது.

மக்களை வழி நடத்தியது

மக்களை வழி நடத்தியது

தொடர்ந்து அந்த நாட்டு மக்களிடம் இந்தியா குறித்த தவறான விஷயங்களை சொல்லி நேபாள அரசு தவறான வழி நடத்தியது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலாவதாக சீனாவுடன் அந்நாட்டு பிரதமர் சர்மா நெருக்கம் ஆகிவிட்டார். சர்மாவின் அரசை கவிழ்க்க சீனா முயன்று வந்தது. தனது ஆட்சியை காக்க வேண்டும் என்பதற்காக சீனாவோடு தற்போது சேர்ந்து கொண்டு இந்தியாவை எதிர்க்கிறார் என்று கூறுகிறார்கள்.

மே மாதம்

மே மாதம்

நேபாளத்தின் அரசியலை சீனா கட்டுப்படுத்தி வருகிறது. அங்கு ஆட்சியை கவிழ்க்க சீனா தீவிரமாக இருந்தது. நான் சொல்வதை கேளுங்கள் , இல்லையென்றால் ஆட்சியில் இருக்க முடியாது என்று ரீதியில் சீனா அழுத்தம் கொடுத்து வந்தது. தற்போது சீனாவின் சொல்படி சர்மா ஆட தொடங்கி உள்ளார். தனது ஆட்சிக்கு எந்த சிக்கலும் வர கூடாது என்று அவர் சீனாவை எதிர்க்க தொடங்கி உள்ளார்.

சீனாவின் சித்து வேலை

சீனாவின் சித்து வேலை

அதேபோல் சீனா இந்தியாவின் அனைத்து எல்லையிலும் 4000 கிமீ தூரத்திற்கு படைகளை குவித்து இருக்கிறது. தற்போது நேபாளம் மூலமும் இந்தியாவை சீண்ட சீனா முயற்சிக்கிறது. எல்லையில் இருக்கும் பாகிஸ்தான், வங்கதேசத்தை இந்தியாவிற்கு எதிராக திருப்பி விட்டது போலவே, தற்போது நேபாளத்தையும் திருப்பி விட்டு உள்ளது. நேபாளத்தை சீனாதான் மேலிருந்து இயக்குவது என்றும் கூறுகிறார்கள்.

English summary
Why Nepal completely didn't listen to India's call for peace talk?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X