அம்மாடியோவ்! 12 நாட்களாக இன்ச் கூட நகராமல் நின்ற வாகனங்கள்..அப்படியொரு டிராபிக் ஜாம்! எங்கு தெரியுமா
பீஜிங்: சில மணி நேரங்கள் டிராபிக் ஜாம் ஏற்பட்டாலே தாங்க முடியாத அளவுக்கு டென்ஷன் எகிறிவிடும் வாகன ஓட்டிகளுக்கு.. ஆனால், தொடர்ந்து 12 நாட்கள் வாகன ஓட்டிகள் அங்குலம் அங்குலமாக நகர்ந்து சென்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. உலகிலேயே நீண்ட டிராபிக் ஜாம் -ஆக கருதப்படும் இந்த சம்பவம் எந்த நாட்டில் நடைபெற்றது என்பது பற்றி பார்ப்போம்.
உலகம் முழுவதுமே டிராபிக் ஜாம் எனப்படும் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட பெரு நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை காண முடிகிறது. உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரமாக இங்கிலாந்து தலைநகர் லண்டன் தான் உள்ளது.

போக்குவரத்து நெரிசல்: அதேபோல இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூர் 6-வது இடத்தில் உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் டிராபிக் சிக்னல்களை கடந்து செல்வதற்குள் வாகன ஓட்டிகள் ஒருவழியாகிவிடுவார்கள். சில நிமிடங்கள் தாமதம் ஆனாலே நேரத்தையும் சிக்னல்களையும் வாகன ஓட்டிகள் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து இருக்கிறோம்..
12 நாட்களாக டிராபிக் ஜாம்: நாள் கணக்கில் டிராபிக் ஏற்பட்டது என்றால்.. வாகன ஒட்டிகள் நிலை என்னவாகியிருக்கும் என்று யோசித்து பாருங்கள்.. அதெப்படி நாள் கணக்கில் டிராபிக் ஜாம் ஆகலாம் என்று சற்று புருவத்தை உயர்த்தி நீங்கள் படிக்கலாம்.. ஆனால் உண்மையில் சீனாவில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு நாள், இரண்டு நாள் இல்லை.. மொத்தமாக 12 நாட்கள்..
டிரக்குகள் சென்றதால்: 12 நாட்களாக ஒரே இடத்தில் வாகன ஓட்டிகள் முடங்கி போயிருக்கிறார்கள். இந்த வினோத சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து இங்கே பார்ப்போம்..
சீனாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 110, தலைநகர் பீஜிங்கில் இருந்து கிங்டாங்சியா வரை செல்கிறது. இந்த சாலையில், மங்கோலியாவிற்கு கட்டுமான பொருட்கள், நிலக்கரிகள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் டிரக்குகள் அதிக அளவில் சென்று கொண்டிருந்து இருக்கின்றன. இந்த டிரக்குகள் மெதுவாக சென்ற காரணத்தால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரு நாளைக்கு ஒரு கி.மீ தான்: நெடுஞ்சாலையில் சுமார் 100 கிமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. தொலைதூரங்களுக்கு செல்ல குடும்பத்துடன் வந்த பயணிகள் இந்த டிராபிக் நெரிசலில் சிக்கி பரிதவித்துள்ளார்கள். அங்குலம் அங்குலமாக கார் நகர்ந்து சென்றதால் உணவு, தண்ணீர் என எதுவும் கிடைக்காமல் நடு சாலையில் தவிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் மட்டுமே நகர முடிந்ததால் என்ன செய்வதென்று வாகனத்திற்குள்ளேயே முடங்கி போயிருக்கிறார்கள் வாகன ஓட்டிகள். சில வாகனங்களில் எரிபொருள் தீர்ந்து அங்கேயே நின்றுவிட்டன. 5 நாட்கள் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், பலரும் தங்கள் வாகனங்களையே தற்காலிக முகாம்கள் போல அமைத்து அங்கேயே தங்கிவிட்டனர்.
வாகன ஓட்டிகள் தவிப்பு: போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் ஒருபக்கம் தவித்துக் கொண்டு இருக்க இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட உள்ளூர் வாசிகள் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கும் விற்றுள்ளனர். சீனாவையே திண்டாட வைத்த இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பீஜிங் நகருக்குள் இரவில் அதிக டிரக்குகளை அனுப்பி போக்குவரத்து நெரிசலை சரி செய்து இருக்கிறார்கள். 14 ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட சீனாவில் குறிப்பிட்ட அந்த நெடுஞ்சாலையை கடந்து செல்லும் போதேல்லாம் வாகன ஓட்டிகள்.. டிராபிக் நெரிசலை நேற்று நடந்தது போல நினைத்து செல்கிறார்களாம்..
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications