Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓவர் வொர்க்அவுட்.. தினம் இரண்டரை கிலோ மாமிசம் தின்ற உலகின் முரட்டு பாடிபில்டருக்கு நேர்ந்த சோகம்

Subscribe to Oneindia Tamil

பொலாரஸ்: உலகில் மிகவும் அழகான மற்றும் வெறித்தனமாக ‛வொர்க்அவுட்' செய்யும் பாடிபில்டர் என பெயர் பெயற்ற பொலாரஸ் நாட்டின் இல்லியா கோலம் தனது 36 வயதில் காலமானார். தினமும் இரண்டரை கிலோ இறைச்சி உள்பட 16,500 கலோரி உணவுகளை எடுத்து கொள்ளும் இவர் இறந்தது எப்படி? தீவிரமாக உடற்பயிற்சியை இவரது மரணத்துக்கு காரணமா? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

6 அடி உயரம்.. 154 கிலோ எடை.. பயல்வான் என்றால் இவர் தான் என சொல்லும் ஆஜானுபாகுவாக கட்டுமஸ்தான உடலுடன் கம்பீரமாக தோற்றமளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இல்லியா கோலம். பொலாரஸ் நாட்டை சேர்ந்த இவருக்கு வயது 36 தான். சிறு வயதில் ஒரு புஷ் அப் கூட எடுக்க தெரியாத இவருக்கு ஹோலிவுட் நடிகர்களை பார்த்து உடற்பயிற்சியின் மீது ஈடுபாடு வந்தது.

bodybuilder health

ஹாலிவுட் நடிகர்களான அர்னால்ட், சில்வெஸ்டர் ஸ்டாலோன் உள்ளிட்டவர்களை இன்ஸ்பிரேஷனாக வைத்து ‛பாடிபில்டிங்' செய்ய தொடங்கியவர் தான் இந்த இல்லியா கோலம். ‛பாடிபில்டிங்' தொடர்பான போட்டிகளில் இவர் பங்கேற்க விரும்பாதபோதிலும் கூட சமூக வலைதளங்கள் மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானர். தனது ‛வொர்க்அவுட்' வீடியோ, போட்டோக்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதிக ரசிகர்களை பெற்றிருந்தார்.

பொதுவாக நம்மில் பலரும் கட்டுக்கோப்பான உடலை பெற உடற்பயிற்சி செய்வது உண்டு. இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் தீவிரமான உணவு கட்டுப்பாடகளை பின்பற்றுவது உண்டு. உணவு கட்டுப்பாடு என்றால் சும்மா சொல்லிவிட முடியாது. உண்ணும் ஒவ்வொரு உணவுகளும் எத்தனை கலோரி என்பதை கணக்கிட்டு சாப்பிட்டு வருவதை நாம் பார்த்திருப்போம். இதற்கு முக்கிய காரணம் கொளுகொளு தொப்பையை விரும்பாதது தான்.

ஆனால் கட்டுமஸ்தான உடலில் கம்பீரமாக வலம் வந்த இல்லியா கோலம் தினமும் 16,000 முதல் 16,500 கலோரிகள் கொண்ட உணவை எடுத்து கொள்வார். இதில் இரண்டரை கிலோ மாமிச உணவுகளும் அடங்கும். பொதுவாக ‛பாடிபில்டர்கள்' கடும் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் நிலையில் இல்லியாக கோலம் முற்றிலும் வேறுபட்டவர். தான் எடுத்து கொள்ளும் உணவுக்கு ஏற்ப அவர் தினமும் ‛வொர்க்அவுட்' செய்து கட்டுமஸ்தான உடலை வைத்திருந்தார். இவர் 600 பவுண்ட் பெஞ்ச் லிப்ட், 700 பவுண்ட் டெத் லிப்ட், 700 பவுண்ட் ஸ்குவாட் செய்து மிரள வைத்தவர்.

இதனால் உடலில் வெறித்தனமான ‛வொர்க்அவுட் மேற்கொள்ளும் ‛பாடிபில்டர்', அழகான ‛பாடிபில்டர்' என்ற பெயருக்கு சொந்தக்காரரானார். இந்நிலையில் தான் கடந்த 6ம் தேதி இல்லியா கோலமுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் கூட சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் இல்லியா கோலம் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் இறந்துள்ளார்.

இதுபற்றிய செய்தி வெளியாகி உள்ள நிலையில் அவரது மரணத்துக்கு தீவிர உடற்பயிற்சியே காரணமாக இருக்கலாம் என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதற்கு தீவிர ‛வொர்க்அவுட்' தான் காரணமாக என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதுபற்றி இல்லியா கோலமின் மனைவி அண்ணா கூறுகையில், ‛‛என் கணவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிரச்சனையின்றி சுவாசிக்க முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. என் கணவர் எப்படியாவது மீண்டு வர வேண்டும் பிரார்த்தனை செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

bodybuilder health

அவரது நிலைமை மோசமான பிறகும் கூட இதயம் தொடர்ந்து துடித்தது. ஆனால் திடீரென்று அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர். இது எனது தலையில் இடியை இறக்கியது. தற்போது அவர் காலமாகிவிட்டார். அவருக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். அவர் இல்லாத இந்த உலகில் நான் எப்படி வாழ போகிறேன் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. ஆனாலும் ஏராளமான மக்கள் எனக்கு உதவிகளை செய்து வருகின்றனர்'' என்று கண்கலங்கி உள்ளார்.

இல்லியா கோலமை போல் மாரடைப்பு ஏற்பட்டு ‛பாடிபில்டர்' ஒருவர் மரணத்தை தழுவுவது இது முதல் முறையல்ல. இவரை போல பல ‛பாடி பில்டர்கள்' மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து மரணத்தை தழுவும் சம்பவங்கள் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. பிரிட்டனை சேர்ந்த நீல் கரே என்ற பாடிபில்டருக்கு வயது 34 தான். அவரும் இந்த மாத தொடக்கத்தில் மாரடைப்பால் காலமானார். அவர் ஸ்டீராய்டு எடுத்து கொண்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக சொல்லப்படுகிறது.

அதற்கு முன்பாக பிரேசிலை சேர்ந்த ஆண்டனியோ சோசா எனும் 25 வயது நிரம்பிய ‛பாடிபில்டர்' கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார். இவரும் மாரடைப்பு ஏற்பட்டு காலாமானர். அதேபோல் தமிழகம் உள்பட பிற மாநிலங்களிலும் ‛பாடிபில்டர்கள்' மாரடைப்பால் இறக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் இளைஞர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக உடல் பலம் முக்கியம் தான் அதேவேளையில் உயிரும் முக்கியம் என்பதை ‛பாடிபில்டர்கள்' உணர்ந்து செயல்பட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+