வயசு 66.. மொத்தம் 16 மனைவி.. டெய்லி 4 பேருடன்..17 ஆவதாக ஒரு தேடல்.. ஜிம்பாப்வேயின் ஜிலீர் தாத்தா!
ஹராரே: ஜிம்பாப்வேயில் 66 வயது முதியவருக்கு 16 மனைவிகள், 151 பிள்ளைகள் உள்ள நிலையில் 17 ஆவதாக ஒரு இளமையான மனைவியை தேடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வேயை சேர்ந்தவர் மிஷ்ஹெக் நியாடோரோ (66). இவருக்கு 16 மனைவிகள், 151 குழந்தைகள் உள்ளனர். தினமும் 4 மனைவிகள் வீதம் அவர்களுடன் ஒவ்வொருவராக உல்லாசமாக இருப்பாராம்.
16 பேரில் தினமும் 4 பேர் வீதம் என அவர்களை திருப்திப்படுத்தும் போது அறைகளை அந்த 4 மனைவிகளின் வயது வாரியாக வரிசைப்படுத்தியுள்ளார்.

ஷெட்யூல்
அதற்கேற்ப 4 பேரையும் ஒருவர் பின் ஒருவராக ஒவ்வொருவரின் அறைக்குச் சென்றும் உல்லாசமாக இருக்கிறார். இந்த 16 பேரில் ஒருவருக்கும் எந்த சண்டையும் இது வரை வந்ததில்லையாம். இதுகுறித்து அந்த 66 வயது நியாடோரோ கூறுகையில் இன்று யாருடன் நான் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஷெட்யூலுக்கு ஏற்ப அறைக்கு செல்வேன்.

இளம் வயது மனைவி
ஒவ்வொருவரையாக திருப்திப்படுத்துவேன். இதுதான் எனது வேலை. எனக்கு வேறு வேலை இல்லை. ஒவ்வொரு மனைவியிடமும் அவர்களது வயதிற்கேற்ப எனது அணுகுமுறை மாறும். வயதான பெண்களுடனான எனது செயல்பாட்டை இளம் வயது மனைவிகளிடம் செய்ய மாட்டேன்.

திருமணம்
வர வர அவர்களுக்கு இப்போது என்னுடன் ஜாலியாக இருப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டது. கேட்டால் வயசாகிறது, முடியவில்லை என்கிறார்கள். எனக்கு நாளுக்கு நாள் ஆசைகள் அதிகரித்து வருகிறது. இதனால் 17ஆவது முறையாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

1000 பிள்ளைகள்
இப்படியே 100 மனைவிகள் 1000 பிள்ளைகள் வரை செல்ல எனக்கு ஆசையாக உள்ளது. திருமணத்தையும் குழந்தை பிறப்பையும் எதற்காக நான் குறைத்து கொள்ள வேண்டும்? அதற்கான உந்துதல் ஏதும் இல்லையே. எனது முழு பணியே எனது மனைவிகளை திருப்திப்படுத்துவதுதான்.

17 ஆவது முறை
1983 ஆம் ஆண்டு பல பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்ற பிராஜெக்ட்டை கையில் எடுத்தேன். அந்த பிராஜெக்ட்டை இப்போது செய்துக் கொண்டிருக்கிறேன். நான் இறக்கும் வகை இந்த பிராஜெக்ட்டை நிறுத்த மாட்டேன். வரும் மழை காலத்திற்குள் நான் 17 ஆவது முறையாக திருமணம் செய்து கொள்வேன்.

16 மனைவிகள்
இப்படி ராட்சத குடும்பத்தால் நான் கவலைப்பட்டதே இல்லை. சந்தோஷமாக இருக்கிறேன்.16 மனைவிகளும் வீட்டு வேலைகளை பகிர்ந்து பார்த்துக் கொள்கிறார்கள். இந்த வீட்டில் நான் போட்ட ஒரு ரூல்ஸ் என்னவெனில் 16 பேரும் தினந்தோறும் சமைப்பார்கள்.

தூக்கி அடிக்கும் முதியவர்
அவர்கள் சமைக்கும் உணவு ருசியாக இருந்தால் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் தூக்கி எறிந்துவிடுவேன். இது அவர்களுக்கு நன்கு தெரியும். இப்படி ஒரு முறை தூக்கி அடித்தால்தான் அவர்கள் மேம்பாடு அடைவர். என் மீது கோபப்படமாட்டார்கள் என்கிறார் புதுமாப்பிள்ளையாக முயற்சித்து வரும் 66 வயது முதியவர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications