'world war III' 2022ல் போர் முடிவுக்கு வராது ! அதிரடி அமெரிக்கா! அவசர ஆலோசனை நடத்தும் ஜெலன்ஸ்கி!
கீவ் : ரஷ்யாவுடனான போரில் இதுவரை 2,500 முதல் 3,000 உக்ரேனிய ராணுவ துருப்புக்கள் இறந்துள்ளதாகவும் மேலும் 10,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ள நிலையில், 2022ல் போர் முடிவுக்கு வராது என அமெரிக்கா கூறியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கி 52வது நாட்கள் ஆகியுள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்து குண்டுவீச்சுக்கு ஆளாகி வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் நாட்டை வீட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நாட்டின் இராணுவத் தலைவர்கள் மற்றும் அதன் புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன் முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலின் நிலை பற்றி விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போர்
"விவரங்களை இப்போது பகிரங்கப்படுத்த முடியாது, ஆனால் எங்கள் மக்களைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்" என்று ஜெலென்ஸ்கி தனது இரவு வீடியோ உரையில் மக்களிடம் தெரிவித்தார். தெற்கு உக்ரைனின் மற்ற இடங்களான கெர்சன் மற்றும் சபோரிஜியாவைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய துருப்புக்கள் 'பொதுமக்களைப் பயமுறுத்துவதாகவும்' இராணுவத்திலோ அல்லது அரசாங்கத்திலோ பணியாற்றிய நபர்களை தேடுவதாக அதிகாரிகள் கூறினர்.

ரஷ்யாவின் முற்றுகை
இந்நிலையில் உக்ரைன் வெள்ளியன்று மரியுபோல் மீதான ரஷ்யாவின் முற்றுகையை உடைக்க முயற்சிப்பதாகக் கூறியது, நகரின் பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகத்தைச் சுற்றி சண்டை மூண்ட நிலையில் மரியுபோலில் நிலைமை கடினமாக உள்ள நிலையில் ரஷ்ய இராணுவம் நகரத்தைத் தாக்க கூடுதல் படைகளுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது என்று உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பொதுமக்களின் உடல்கள்
தென்கிழக்கு உக்ரைனில் உள்ள அசோவ் கடலில் உள்ள மரியுபோல், ஏழு வார கால யுத்தத்தில் மிக மோசமான சண்டையைக் பார்த்துள்ளது. ரஷ்யா இன்னும் மரியுபோலைக் கைப்பற்றவில்லை என்று உக்ரைன் கூறுகிறது. ரஷ்யா மரியுபோலைக் கைப்பற்றினால், இதுவரை ரஷ்யர்களிடம் வீழ்ந்த ஒரே பெரிய நகரமாக அது இருக்கும். ரஷ்யா படைகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து உக்ரைன் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதியில் 900க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவர்களில் பெரும்பாலோர் சுட்டுக் கொல்லப்பட்டனர், பலர் தூக்கிலிடப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

பதில் தாக்குதல்
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், இந்த வார தொடக்கத்தில், ரஷ்ய பிரதேசத்தில் உக்ரைன் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கீவ் மீது ஏவுகணைத் தாக்குதல்களை முடுக்கிவிடுவதாக உறுதியளித்தது. வெள்ளியன்று கருங்கடலில் போர்க்கப்பலை இழந்த பிறகு உக்ரேனிய ராக்கெட் தொழிற்சாலையை ரஷ்யாவும் தாக்கியது. தலைநகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள விசார் ஆலை, இரவு நேர தாக்குதலில் கடுமையாக சேதமடைந்ததாக AFP செய்தியாளர் தெரிவித்தார். வெடிமருந்து வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, கருங்கடலில் இருந்த போர்க்கப்பல் கடலில் இழுத்துச் செல்லப்பட்டபோது மூழ்கியதாக ரஷ்யா கூறியது.ஆனால் உக்ரைன் தங்கள் ராணுவத்தின் ஏவுகணை ஒன்று தான் மூழ்கடித்ததாக கூறியது.












Click it and Unblock the Notifications