For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'கசக்கும்' காதலை பிரித்து வைக்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனம்

By BBC News தமிழ்
|
பிரிவிலும் வேதனை
Getty Images
பிரிவிலும் வேதனை

உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா?

இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார்.

"உறவை முறித்துக் கொள்வது என்பது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம். அந்த வேதனையை நான் நேரடியாக அனுபவிப்பதற்கு பதிலாக இன்னொருவர் அனுபவிப்பது எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன்," என்கிறார், ட்ரெவர் மெயர்ஸ் என்ற அந்த இளைஞர்.

அது எப்படி?

உறவுகளை முறிப்பதற்கென்றே ஒரு நிறுவனம் இருக்கிறது. ஆங்கிலத்தில், The Breakup Shop' என்று சொல்கிறார்கள். நம்ப முடியவில்லையா? நிஜம்தான். அந்த நிறுவனத்தின் சேவையைத்தான் ட்ரெவர் நாடினார். அவர் இருப்பது கனடாவில்.

வாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா?

முகப்பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்

"எனக்கு ஒத்துவராது என்று தெரிந்ததும் ஒருசில குறுகிய கால நட்புக்களை பிரேக்அப் ஷாப் உதவியுடன்தான் கைகழுவிவிட்டேன். எப்படியிருந்தாலும் நமக்காக உறவை முறிப்பவர்கள் பணம் பெற்றுக் கொள்கிறார்கள். இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. இதை அடிக்கடி பயன்படுத்தாவிட்டாலும். அதற்காக ஒரு நிறுவனம் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது" என்கிறார் அவர்.

ப்படி உருவானது உறவை முறிக்கும் கடை'?

கனடாவைச் சேர்ந்த சகோதரர்கள் இவான் மற்றும் மெகென்ஸி கீஸ்ட் ஆகியோர் இணைந்து, 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதை உருவாக்கினார்கள்.

ஆனால், அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா?

காதலர்கள்
Getty Images
காதலர்கள்

மெகென்ஸியை காதலித்து வந்த ஒரு பெண், திடீரென அவரது வாழ்க்கையில் இருந்து மறைந்துவிட்டார். தினமும் சுற்றித்திரிந்து, உற்சாகமாக இருந்த அவரது மனம் துடித்தது. ஆனால், தொலைபேசித் தொடர்பு கூட இல்லை. அனுப்பிய குறுந்தகவல்களுக்கும் காதலியிடமிருந்து பதில் இல்லை. பிரிவை நேரடியாகச் சொல்லும் மன வலிமை அந்தக் காதலிக்கு இல்லை" என்றார் இவான்.

ஒல்லியான அழகிகளுக்கு ஃபிரான்ஸ் தடை

அந்தப் பிரிவால் பிறந்ததுதான் பிரேக்அப் ஷாப்'. அடுத்த ஒரே வாரத்தில் அந்த நிறுவனம் உருவானது.

காதலியோ, காதலனோ அல்லது நாம் நட்பு வைத்திருக்கும் எந்த ஒரு நபருடனோ உறவு முறிய வேண்டுமானால் அவருக்கு மொபைல் ஃபோனில் குறுந்தகவல் அல்லது ஈ-மெயில் மூலம் தகவல் அனுப்ப குறைந்தபட்ச 10 கனடா டாலர்களை (6 பிரிட்டன் பவுண்டுகள்) கட்டணமாக வசூலிக்கிறது பிரேக்அப் ஷாப். அதிகபட்சமாக, குக்கீஸ் மற்றும் ஒயின் பாட்டில் ஆகிய பரிசுப்பொருட்களுடன் பிரேக்அப் பரிசுப் பெட்டி ஒன்றை அனுப்புவதற்கான கட்டணம் 80 டாலர்கள்.

இந்தியா காதலர்கள்
Getty Images
இந்தியா காதலர்கள்

தகவல்களை எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக் கொள்ளலாம். ஆனால், தரக்குறைவாகவோ மனம் புண்படும் வகையிலோ எந்தத் தகவலையும் தங்கள் நிறுவனம் அனுப்பாது என்கிறார் இவான்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான உறவுகளை முறித்து சிறந்த சேவையாற்றியிருப்பதாக பெருமிதம் கொள்கிறார்கள் இந்த சகோதரர்கள். இது பகுதி நேர வேலைதான். தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் முழுநேர பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இது வேகமான உலகம்'

தங்கள் நிறுவனத்தின் நோக்கம் பற்றிக் கேள்விப்பட்டதும், என்ன கொடுமை சார் இது' என்று சொல்லி சிலர் சங்கடப்படுகிறார்களாம். ஆனால், காலம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இவானின் பதிலாக இருக்கிறது.

"மிக வேகமான தகவல் தொடர்பு உலகில் இருக்கிறோம். எல்லாமே உடனுக்குடன் நடக்கிறது. அப்படியே முடிந்தும் போகிறது. எல்லா வழிகளிலும், அடுத்த தலைமுறை தகவல் தொடர்பில் புரட்சி படைக்கிறது" என்கிறார் இவான்.

வரம்பு மீறலா ?

உறவைத் தேடி
Getty Images
உறவைத் தேடி

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் இணையதள இன்ஸ்டியூட்டின் ஆராய்ச்சி விஞ்ஞானியான பெர்னி ஹோகன், உறவுகளை முறித்துக் கொள்வது என்பது ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துவிட்டதாகச் சொல்கிறார்.

"காதலன் - காதலி இடையே இப்போதெல்லாம் ஒருமித்த கருத்து என்ற தத்துவம் எல்லாம் மாறிப்போய்விட்டது. இணையதளம் வழியாகவோ அல்லது வேறு வழிகளிலோ ஒருவரைச் சந்திக்கும்போது, அவர்கள் நண்பர்களின் நண்பர்களாகவோ அல்லது சக பணியாளர்களின் நண்பர்களாகவோ இருப்பதில்லை. அதனால், உறவு முறியும்போது பெரும்பாலும் நெருங்கிய நட்புக்களைப் பிரியும்போது ஏற்படும் வலி இருப்பதில்லை" என்கிறார் அவர்.

பிரிவு வரும்
Getty Images
பிரிவு வரும்

"அதிகாரப்பூர்வமாக உறவை முறித்துக் கொள்ளாமல், மூன்றாவது நபர் மூலமாகமாக உறவை முறித்துக் கொள்வது ஒருவேளை சரியானதாக இருக்கலாம். இருந்தாலும், இது நெறிமுறை மீறல்தான்" என்கிறார் அவர்.

அதே நேரத்தில், உன் காதல் உனக்கு இல்லை' என்று யாரோ ஒருவர் தீர்ப்பு சொல்வதை, எல்லாக் காதலர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதும் உளவியலாளர்களின் கருத்தாக உள்ளது.

இவையும் சுவாரஸ்யமாக இருக்கலாம் :

ஒல்லியான அழகிகளுக்கு ஃபிரான்ஸ் தடை

முன்னாள் கணவரை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்

சர்ச்சையை கிளப்பும் ஆண்குறி இருக்கை!

யார் இந்த அண்டர்டேக்கர்?

ஆதார்: உங்கள் வீட்டுக்குள் ஊடுருவிய உளவாளியா?

முகப்பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்

BBC Tamil
English summary
Would you pay someone to break up with your partner for you?That's exactly what 28-year-old Trevor Meyers did.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X