ஆம்பூர் ஃபரிதா குழும தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 62 இடங்களில் 4-வது நாளாக ஐடி ரெய்டு நீடிப்பு
ஆம்பூர்: சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 62 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று 4-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தோல் தொழிலில் ஃபரிதா குழுமம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் தயாரிப்பு என 11 தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது ஃபரிதா குழுமம்.
தமிழகத்தில் சென்னை, திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆம்பூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள ஃபரிதா குழுமத்தின் தொழிற்சாலைகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 4-வது நாளாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 4 நாட்களாக மொத்தம் 62 இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகால வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications