தமிழால் உருவம் "வடித்த" கலைஞன்.. ஆஹா.. இது நானா.. நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா!
காஞ்சிபுரம்: தனது உருவத்தை பண்டையத் தமிழ் எழுத்துகள் மூலம் வரைந்த தமிழக கலைஞரை தமிழில் பாராட்டியுள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.
66 வயதாகும் ஆனந்த் மகிந்திரா சமூகவலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். இவரது கவனத்திற்கு புதுமையான விஷயம் வந்தால் உடனே அதை வெளியுலகிற்கு கொண்டு வந்து அதை பாராட்டிவிடுவார்.
அந்த வகையில் ஓவியர்கள், பழைய பொருட்கள் மூலம் வாகனத்தை அசம்பிள் செய்த நபர், மரக்கட்டைகளால் திரெட் மில் செய்தவர் என பெரும்பாலானவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இட்லி பாட்டி
மேலும் கோவையை சேர்ந்த இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு புதிதாக வீடு கட்டி அதை அன்னையர் தினத்தில் ஒப்படைத்துள்ளார். நிறைய நற்காரியங்களை செய்து வரும் ஆனந்த் மகிந்திராவுக்கு பாலோயர்ஸ்கள் அதிகம். அந்த வகையில் ஆனந்த் மகிந்திராவின் உருவத்தை தமிழ் எழுத்துகளால் வரைந்துள்ளார்.

741 பண்டைய தமிழ் எழுத்துகள்
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கணேஷ். 741 பண்டைய தமிழ் எழுத்துகள் மூலம் இந்த படத்தை வரைந்துள்ளார். இது போல் வரைவது இதுதான் முதல்முறை என கூறி வீடியோவை பதிவிட்டுள்ள கணேஷ், உங்களின் ஆலோசனையை கேட்க ஆவலாக உள்ளேன் என ஆங்கிலத்தில் பதிவு போட்டிருந்தார்.

ஆனந்த் மகிந்திரா ட்வீட்
இதற்கு ஆனந்த் மகிந்திரா தமிழில் பதில் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் ஆஹா என் உருவப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது. நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

முதல்வரிடம் பாராட்டு
ஆனந்த் மகிந்திரா நிறைய பேரது தனித்துவமான சாதனைகளை கண்டறிந்து பாராட்டுகளையும் வெகுமதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். தற்போது பாராட்டுக்குள்ளான கணேஷ் தனது ஓவியங்களுக்காக முதல்வர் ஸ்டாலினிடம் பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications