காஞ்சிபுரத்தில் துணிகர கொள்ளை.. தப்பி ஓடியவர்களை சினிமா பட பாணியில் பிடித்த போலீசார்.. பரவும் வீடியோ
காஞ்சிபுரம்: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள கடையில் நள்ளிரவில் புகுந்து கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றவர்களை சினிமா பட பாணியில் போலீசார் துரத்தி சென்று கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மாநகராட்சிகுட்பட்ட பூக்கடைச்சத்திரம் அருகிலுள்ள செங்கழுநீரோடை வீதி பகுதியில் பிரபல தனியார் பால் நிறுவனத்தின் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையமானது இயங்கி வருகிறது.
காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த விற்பனை நிலையம் செயல்பட்டு வரும். இதில் சம்பவத்தன்று வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் கடையை பூட்டி விட்டு சென்றனர்.

துணிகர கொள்ளை
இந்நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் 5 பேர், திடீரென இந்த விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். ஏதோ சத்தம் கேட்கிறதே என்ற அந்த பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் இதை கவனித்தான். உடனடியாக சிறுவன் போலீசுக்கு போன் செய்து நடந்ததை கூறினான். மேலும் கொள்ளையர்கள் உள்ளே செல்வதை வீடியோவாக எடுத்து கொண்டான். இதற்கிடையே தகவலின் பேரில் சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

போலீசார் விசாரணை
ஆனால் அதற்குள் கடையில் கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் கடை உரிமையாளருக்கு போன்செய்து வரவழைத்து கடையில் சோதனை நடத்தினர். இதில் கடையில் உள்ள 2 லட்சத்து 43 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டுசென்றது தெரியவந்தது.
இதனையெடுத்து கொள்ளையர்களின் அடையாளங்களை வைத்து சிவ காஞ்சி காவல் ஆய்வாளர் சுந்தராஜன் தலைமையில் போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து காஞ்சிபுரம் மாநகர பகுதிகள் முழுவதும் வலைவீசி தேடினர். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து சிசிடிவி கேமரா காட்சியை போலீசார் விழிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

வாக்கி டாக்கியில் அலர்ட்
அப்போது நெல்லுகாரத்தெரு பகுதியிலுள்ள ஓர் பெட்ரோல் பங்கின் அருகே குறிபிட்ட அந்த 5 பேர் நின்று கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர். இதையடுத்து உடனடியாக வாக்கி டாக்கி மூலம் அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த போலீசாருக்கு அலர்ட் செய்தனர். இதையடுத்துபோலீசார் உடனடியாக மோட்டார் சைக்கிளில் விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் கொள்ளை நபர்கள் பதறியடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பி செல்ல முயன்றனர். எனினும் போலீஸ்காரர் இளங்கோ என்பவர் துணிச்சலுடன் சினிமா பட பாணியில் கொள்ளையர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி அவரை கீழே விழச்செய்தார். இதையடுத்து அவரை போலீஸ்காரர் இளங்கோ இறுக பிடித்துக்கொண்டார்.

உயிர் தப்பினால் போதும்டா சாமி...
இதை பார்த்ததும் மற்ற கொள்ளையர்கள் காவலர் இளங்கோவை தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாகத்திகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். அதனையும் பொருட்படுத்தாத காவலர் இளங்கோ அவரை இறுக பிடித்தபடி மர்ம நபர்களுக்கு ஆட்டம் காட்டினார். இதற்கிடையே மற்ற போலீசாரும் அங்கே வருவதை பார்த்த கொள்ளையர்கள் உயிர் தப்பினால் போதும்டா சாமி என்றபடி, பிடிபட்ட சக கொள்ளையரை நிற்கெதியாக விட்டுவிட்டு மற்ற கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள்களில் சிட்டாக பறந்து சென்றுள்ளனர்.

கிடுக்கிப்பிடி விசாரணை
இதனையெடுத்து போலீசாரிடம் பிடிபட்ட அந்த மர்ம நபரை காவல்நிலையம் அழைத்து சென்ற அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் பெயர் பிரேம் குமார் வயது (20) என்பதும், சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பால் விற்பனை நிலையத்தில் நள்ளிரவு நடைபெற்ற கொள்ளை சம்பவத்தினை அறங்கேற்றி பெட்ரோல் பங்க்கிலும் கொள்ளையடிக்க ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. தனிப்படைகள் அமைத்து தப்பி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மற்றொருவர் பிடிபட்டார்
இந்நிலையில் நேற்று முன் தினம் காலை சிவகாஞ்சி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையில், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே நின்று கொண்டிருந்த சென்னை அன்னை சத்யா நகரை சேர்ந்த ஜோசப்(19)என்கிற மற்றொரு கொள்ளையனையும் போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இவர்கள் 5 பேரும் கொள்ளையடித்த பணத்தில், பங்கு பிரித்து வைத்திருந்த 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயையும் சிவ காஞ்சி போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சிறுவன், போலீஸ்காரருக்கு பாராட்டு
பட்டபகலிலேயே கொள்ளை சம்பவங்கள் அறங்கேறினாலும் தனக்கென்ன என்று இருந்திடுவோர் மத்தியில் 15 வயது சிறுவன் ஒருவன் கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து போலீசாருக்கு உதவிடும் வகையில் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கும் செயல் அனைவரிடத்திலும் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அதேபோல் உயிரை பணையம் வைத்து கொள்ளையர்களை எப்படியாவது பிடித்திட வேண்டும் என்பதற்காக தனது யுக்தியை பயன்படுத்தி கொள்ளையர்களின் இருசக்கர வாகனத்தில் மோதி கொள்ளையன் ஒருவனை காவலர் ஒருவர் பிடித்த செயலும் அனைவரிடத்திலும் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
இந்த நிலையில், பெட்ரோல் பங்க்கில் இருந்த கொள்ளையர்களை போலீஸ்காரர் இளங்கோ இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கிழே விழச்செய்து பிடித்த காட்சிகளும், கொள்ளையனை பிடித்ததும், பட்டாக்கத்திகளை கொண்டு காவலரை தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் மீதமுள்ள கொள்ளையர்கள் மூவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications