திருமாவுடன் நடந்த சந்திப்பு.. திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டதாம்.. சொல்கிறார் வைகைச் செல்வன்!
காஞ்சிபுரம்: ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவனை 20 நிமிடங்கள் சந்தித்து வைகை செல்வன் பேசி இருந்தார். அதுவெறும் இலக்கிய சந்திப்பு என்று திருமாவளவன் கூறி இருந்த நிலையில், வைகை செல்வன் கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டதாக கூறி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வைகை செல்வன் சந்தித்து கொண்டனர். அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இரு கட்சியின் நிர்வாகிகளும் தங்களது கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்று கூறி வருகின்றனர்.

திருமா - வைகை செல்வன் சந்திப்பு
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேசி வருகிறோம். அவர்கள் ஏற்கனவே எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிதான். திருமாவளவன் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிட்ட விரும்புகிறோம் என்று கூறி வந்தார். இந்த நிலையில் திருமாவளவன் - வைகை செல்வன் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
திருமாவளவன் விளக்கம்
சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், அரசியல் எதுவும் பேசவில்லை என்று திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் ஒரே விடுதியில் தங்கியதால், அவர் ஒரு புத்தகம் கொடுத்தார். அப்போது அவரின் இலக்கியப் பணிகள் குறித்து பேசியதாக விளக்கம் அளித்தார். திமுக கூட்டணி ஒற்றுமையுடன் செயல்பட திருமாவளவன் முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.
திமுக கூட்டணியில் ஓட்டை
இந்த நிலையில் அவர் அதிமுக நிர்வாகியை சந்தித்தது பல்வேறு விவாதங்களை தொடங்கியது. தற்போது காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருமாவளவன் உடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகை செல்வன், ஆளுங்கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதை தான் என்னால் சொல்ல முடியும்.
பூவை ஜெகன் மூர்த்தி விவகாரம்
இது முதல் கட்டம்தான். அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்களை பார்க்க போகிறீர்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பூவை ஜெகன் மூர்த்தி விவகாரம் தொடர்பான கேள்விக்கு, அதிமுக கூட்டணியில் இருக்கிறார் என்ற காரணத்திற்காகவும், ஒரு எம்எல்ஏ என்ற நிலையை கூட கருத்தில் கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியில் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
அதிமுக - பாமக கூட்டணி?
இதற்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு தந்துள்ளது என்று அரசு சொல்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம். அடுத்தக்கட்ட நிகழ்வுகளை பார்த்த பின்னரே, பேச முடியும் என்று தெரிவித்தார். அதிமுக உடன் பாமக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். ஆனால் பாமக உடைந்ததற்கு திமுக தான் காரணம் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளதை பார்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
-
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications