காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சபலத்தால்" சாய்ந்த டீன்ஏஜ்கள்.. பாவம் சதீஷ்.. லோகேஸ்வரி கழுத்தை பாத்தீங்களா.. கடைசியில்தான் ஹைலைட்

திமுக பிரமுகரை வெட்டிக் கொன்ற லோகேஸ்வரி போலீசில் சரண் அடைந்தார்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டி, தலையை தனியாக துண்டித்த லோகேஸ்வரி, கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சதீஷ்.. 30 வயதாகிறது.. திமுக வார்டு செயலாளராக இருந்த இவரை லோகேஸ்வரி லோக்கல் தாதா அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டார்.

இவருக்கு எஸ்தர் என்று இன்னொரு பெயரும் உள்ளது.. லோகேஸ்வரியின் கள்ளச்சாராய வியாபாரம் பற்றி, போலீசுக்கு சதீஷ் தகவல் தந்த நிலையில், அது தொடர்பான ஆத்திரத்தில் சதீஷை நயவஞ்சமாக பேசி தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து கொன்றுவிட்டார் லோகேஸ்வரி.

லோகேஸ்வரி

லோகேஸ்வரி

மிகப்பெரிய அரிவாளை எடுத்து, சதீஷின் தலையை துண்டாக வெட்டிவிட்டு, அந்த தலையை வீட்டின் வாசலில் கேட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு, வீட்டை பூட்டி தலைமறைவாகி விட்டார்... இதையடுத்து கொலை சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.. அத்துடன் சதீஷ் மீதான அனுதாபமும் அந்த பகுதி மக்களிடம் கூடியது.. இயல்பாகவே, சமூக அக்கறை உள்ள இளைஞர் சதீஷ்.. தவறு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்கும் துணிச்சலுடையவர்.. சில சமூக விரோத செயல்கள் குறித்து போலீசாருக்கும் அவ்வப்போது சதீஷ் தகவல் கொடுத்து வந்ததாக தெரிகிறது...

எஸ்தர்

எஸ்தர்

அப்படித்தான் கள்ளச்சாராயம் விற்கும் லோகேஸ்வரி பற்றியும் தகவல் தந்துள்ளார்.. லோகேஸ்வரி விற்கும் கள்ளச்சாராயத்தினால், அந்த பகுதி இளைஞர்கள் பலர் மதுவுக்கு அடிமையாகியும் வந்துள்ளது, சதீஷூக்கு கூடுதல் கடுப்பை தந்துள்ளது.. அதனாலேயே பலமுறை லோகேஸ்வரி பற்றி நிறைய முறை துப்பு தந்துள்ளார்.. சமீபத்தில் தந்த தகவல்களினால் போலீஸார் நடவடிக்கை எடுத்துவிட்டதால், தினமும் வரக்கூடிய ஆயிரக்கணக்கான மாமூல் பணம் தடைபட்டுள்ளது. இதுதான் லோகேஸ்வரிக்கு எரிச்சலை தந்துள்ளது.

சதீஷ்

சதீஷ்

சதீஷ் தலையை துண்டாக அறுத்துள்ளார் என்றால், லோகேஸ்வரி தனியாக இந்த கொலையை செய்திருக்க முடியாது என்று போலீசார் முடிவு செய்தனர்.. இதற்கு பிறகு விசாரணையை தீவிரப்படுத்தியபோதுதான், ஆதரவாளர்களை முன்கூட்டியே தன் வீட்டிற்கு லோகேஸ்வரி வரவழைத்துள்ளதும், சதீஷ் வீட்டிற்குள் நுழைந்ததுமே அரிவாளால் வெட்டி சாய்த்ததும் தெரியவந்தது.. இதையடுத்து போலீசார் உடனடியாக தனிப்படை ஒன்றும் அமைத்து, லோகேஸ்வரி & டீமை தேடி வந்தனர்.. ஆனால், அதற்குள் இந்த கொலையை செய்த நவமணி, ராஜேஷ், சதீஷ், கோழி அன்பு ஆகியோர் சைதாப்பேட்டை போலீசில் சரணடைந்தனர்..

 விபச்சாரம்

விபச்சாரம்

45 வயதாகும் லோகேஸ்வரி, விபச்சார தொழிலைதான் பிரதானமாக செய்து வந்துள்ளார்.. இதற்காக பல இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளி நாசமாக்கி உள்ளார்.. சபலத்தில் சிக்கும் எத்தனையோ இளைஞர்களிடம் பணம் பறித்துள்ளார்.. ஆனால், இந்த தொழிலைவிட, கள்ளச்சாராய தொழிலில்தான் நிறைய பணம் வந்துள்ளது.. டாஸ்மாக் கடை குறிப்பிட்ட நேரம் வரையே திறந்திருப்பதால், 24 மணி நேரமும் லோகேஸ்வரியிடம் மதுபானங்கள் விற்பனையாகுமாம்.. கடையடைப்பு, டாஸ்மாக் விடுமுறை நாட்களில், 3 மடங்கு விலையை உயர்த்தி மது விற்பனை செய்வாராம்.

 சரக்கு பாட்டில்

சரக்கு பாட்டில்

இதைத்தவிர, டாஸ்மாக் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கடத்திவரப்படும் மதுபாட்டில்களையும் வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.. எனவே, மதுவிலக்கு போலீசுக்கு மாமூல் தடையின்றி சென்றதால் அவர்களும் லோகேஸ்வரியை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.. ஆனால், தங்கள் பகுதி இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதால், கள்ளச்சந்தையில் மது விற்பதை தடுக்க வேண்டும் என்று சதீஷ் ஏராளமான ஆதாரங்களுடன் புகார் தந்ததால்தான், போலீசாரும், வேறு வழியில்லாமல் மதுவிற்பனையை நிறுத்திவைக்கும்படி லோகேஸ்வரியிடம் தெரிவித்துள்ளனர்.

ஹைலைட்

ஹைலைட்

இதில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. தன்னுடைய கணவனையே, போட்டுத் தள்ளியவராம் லோகேஸ்வரி.. கணவனை கொலை செய்த வழக்கில் ஜெயிலுக்கும் போய் வந்துள்ளார்.. இந்த விஷயம் அறிந்து, அந்த பகுதி மக்கள், லோகேஸ்வரியை எதிர்த்து பேச பயந்து வந்துள்ளனர்.. அதனால்தான், அம்மக்கள் சார்பாக சதீஷ் தட்டிக் கேட்டுள்ளார். இன்னொரு ஹைலைட்டும் இருக்கிறது.. எப்போதுமே லோகேஸ்வரி கழுத்து நிறைய நகைகளுடன் அந்த பகுதியில் வலம் வருவாராம்..

 மஞ்சள் கயிறு

மஞ்சள் கயிறு

ஆனால், கோர்ட்டில் தன்னுடைய சகாக்களுடன் சரணடைய வருவதற்கு முன்பு, தான் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றி, உறவினர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டாராம்.. வெறும் மஞ்சள் கயிற்றை மட்டும் கழுத்தில் கொண்டுதான் கோர்ட்டுக்குள் சரணடைய வந்தாராம்.. இவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவில்லை.. ஆனால், மக்கள் பிரநிதியாக கிளர்ந்தெழுந்த சதீஷின் கொடூர மரணம், சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியபடியே உள்ளது..!

English summary
DMK Panchayat member satish murder case and five including Lokeshwari surrender in the court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X