உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்.ராஜா பகீர் கருத்து!
காஞ்சிபுரம்: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எச்.ராஜா. அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலின் துணை முதல் அமைச்சராக அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறதே என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எச்.ராஜா, “உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினால் தமிழகத்தில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது. கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என சனதான தர்மம் கூறுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளச்சேரியில் தனியார் பள்ளி வைத்துள்ளதால் மாணவர்களிடம் பள்ளி கட்டணமாக வாங்க முடியாது என்பதால் சாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார். ஆகையால் தான் சனாதானத்தை கொசு டெங்கு போன்றவை அழிக்க வேண்டும் எனப் பேசி வருகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய எச்.ராஜா, “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் தமிழக காவல்துறை அவசர அவசரமாக திருவேங்கடத்தை கொலை செய்தது? ஜெயிலிலில் இருந்து வெளியே வந்த நபரிடம் எப்படி ஆயுதம் வந்தது? ஜெயிலில் இருந்து எப்படி அதிகாலை 5 மணிக்கு குற்றவாளி கொண்டு வரப்பட்டார்? உள்ளிட்ட பல்வேறு சந்தேகம் எழுந்து வருவதால் இது திட்டமிட்டபடி 100 சதவீத கொலைதான்.
இதில் ஆளும் கட்சியினர் தொடர்பு அதிகம் இருப்பதாக சந்தேகம் வருவதால் ஆரம்பகட்ட காலத்திலிருந்து எதிர்கட்சிகள் அனைவரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.” எனப் பேசி இருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் பாஜகவினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உதயநிதிக்கு எதிராக பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அமைச்சர் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலினை நீக்க வேண்டும் என்றும் பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தான் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
-
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி -
சில்லுண்டிகளை வச்சிக்கிட்டு? தவெக விஜய் அரசை துவம்சம் செய்த எச்.ராஜா.. அண்ணாமலைக்கும் விழுந்த செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications