ஏர்கூலரால் கலைந்த ஹேர் ஸ்டைல்.. மேடையிலேயே டென்ஷனான அமைச்சர் கேஎன் நேரு.. நடுங்கிய நிர்வாகிகள்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விவசாய சங்க கூட்டியக்கம் சார்பில் விவசாய திருவிழா மேடையில் ஏர்கூலரால் ஹேர் ஸ்டைல் கலைந்த நிலையில் அமைச்சர் கேஎன் நேரு டென்ஷனாகி கைநீட்டி திட்டியதால் நிர்வாகிகள் நடுங்கிப்போயினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

காஞ்சிபுரம் மாநகருக்கு உட்பட்ட வள்ளல் பச்சையப்பன் தெருவில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு விவசாய சங்க கூட்டியக்கம் சார்பில் 2 நாள் விவசாய திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

kn nehru kanchipuram dmk


இந்த விவசாய திருவிழா இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இதில் விவசாய விளைபொருட்களின் கண்காட்சி மற்றும் விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் விவசாய திருவிழாவை 3 அமைச்சர்கள் இணைந்து தொடங்கி வைத்தனர். வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு, கிராம தொழில் மற்றும் சிறு தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் சேர்ந்து விவசாய திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

அதன்பிறகு நிகழ்ச்சி மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கினர். அதன்பிறகு அவர்கள் மேடையில் அமர்ந்து உரையாற்றினர். அப்போது மேடையில் ஏர்கூலர் இருந்தது. அமைச்சர்கள், நிர்வாகிகள் புழுக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் ஏர்கூலர் வசதி செய்யப்பட்டு இருந்தது. முதலில் இந்த ஏர்கூலர் ஆன் செய்யப்பட்டது.

‛‛தஞ்சை பெரிய கோவில் போனால் கதை முடிந்தது’’.. அன்பில் மகேஷை எச்சரித்த கேஎன் நேரு! பறிபோகும் பதவி?


அப்போது அமைச்சர் கேஎன் நேருவின் ஹேர் ஸ்டைல் கலைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏர்கூலர் வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கலைந்த ஹேர் ஸ்டைலை அவர் சீப்பு கொண்டு மீண்டும் நேர்த்தியாக சீவினார். ஆனால் அடுத்த சில நிமிடங்கள் மீண்டும் ஏர்கூலர் ஆன் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடும் டென்ஷனான அமைச்சர் கேஎன் நேரு, ஏர்கூலர் பக்கத்தில் இருந்த நிர்வாகியை நோக்கி கையை நீட்டி கடுமையாக கடிந்து கொண்டார்.

இதையடுத்து அங்கிருந்த அமைச்சர் தாமோ அன்பரசன் உள்ளிட்டவர்கள் ஏர் கூலரை ஆப் செய்ய கூறினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஏர்கூலரால் அமைச்சர் கேஎன் நேரு டென்ஷனான நிர்வாகியை கடிந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+